Breaking News

விக்டோரியாவின் கொரோனா தடுப்பு கொள்கைகள் காரணமாக அத்தியவசிய சேவையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

விக்டோரியாவில் அண்மைக் காலமாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விக்டோரியாவில் உணவுப் பொருள் விநியோகம்,மருத்துவத்துறை, அத்தியாவசிய பணியாளர்கள் போன்றோருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டலோ அல்லது பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தாலோ அவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது .

விக்டோரியாவில் இருக்கக்கூடிய இந்த கடும் கட்டுப்பாடு காரணமாக ஏராளமான அத்தியவசிய பணியாளர்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

There have been fears that Victoria's corona prevention policies could jeopardize essential services,பிரசித்தி பெற்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனமான வூல் வொர்த் , கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 25 ஆயிரம் பணியாளர்களை தனிமைப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக உணவு விநியோகத் துறையில் கடுமையான ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் இந்த பாதிப்பு பொது மக்களை சென்றடைய வாய்ப்பு இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது

அதேபோன்று மருத்துவ பணியாளர்களும் இதுபோன்று தனிமைப்படுத்தப் படுவதன் காரணமாக சில நேரங்களில் அவர்களுக்கும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

அதேபோன்று கடந்த வாரம் டிராம் வாகன ஓட்டுனர் சிலருக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக மெல்போர்ன் நகரில் பெரும்பாலான இடங்களில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது

There have been fears that Victoria's corona prevention policies could jeopardize essential servicesஇந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த கூடிய ஆஸ்திரேலியாவின் உணவு மற்றும் மளிகை பொருள் கவுன்சிலின் தலைவர் Tanya Barden அரசின் இந்த கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் வெறும் சேவை பாதிப்பு மட்டும் ஏற்படுத்தாமல் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் இதன் காரணமாக விநியோகச் சங்கிலி முழுமையாகப் பாதிக்கப்படும் அவர் அச்சம் தெரிவித்திருக்கிறார் ..

இதை தவிர்க்க நியூ சவுத் வேல்ஸ் மாகாண கொரோனா கொள்கையை போல 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பணியாளர்கள் தொற்றாளர்களுடன் தொடர்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என்ற முடிவு வந்தால் தனிமைப்படுத்துதல் கட்டயமில்லை, அவர்கள் தொடர்ந்து பணிபுரியலாம் என்ற விதி அமலில் உள்ளது.

சூப்பர் மார்கெட் துறையின் கோரிக்கை குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக விக்டோரிய பிரிமீயர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தொடர்பறிதல் நடவடிக்கை மூலமாக முன் களப்பணியாளர்கள் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப் பட்டனர்.

அவர்களில் 75 சதவீதம் பேருக்கு தோற்று இல்லை என்று முடிவு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/2Y3UCDV