Breaking News

மெல்போர்ன் மக்கள் அனுமதி இல்லாமல் விக்டோரியாவில் பதுங்க முயன்றால் $5000 அபராதம் !

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தவும், மக்களை பாதுகாக்கவும், அனைத்து பகுதிகளிலும் அரசு மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி உள்ளது. நகரை சுற்றி பல பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதையும் தாண்டி யாராவது விக்டோரியாவின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டால் அவர்களுக்கு $ 4957 வரை அபராதத்தை விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அணைத்தும்,அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.

சில முக்கியமான தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதி உண்டு, மருத்துவம் ,மருத்துவம் சார்ந்த வேலைகள் மற்றும் அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டும் வெளியே செல்லுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த பாதுகாப்பு சட்டத்தை குறித்து டெபுடி கமிஷனரான ரிக் நுஜென்ட் கூறுகையில் ,”இந்த சட்டங்கள் கடுமையாக தான் இருக்கின்றது ஆனால், மக்கள் ஆபத்தில் சிக்கிக் சிக்குவதை நாங்கள் விரும்பவில்லை, இந்த கொடூரமான கொரோனா வைரஸ் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை அதனால் இது மாதிரியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்று கூறினார்.

நகருக்குள் நுழையும் ஒவ்வொரு வாகனங்களும் துல்லியமாகவும், தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு நுழைவாயில்களிலும் பாதுகாப்பு தீவிர படுத்தப்படும். கடலோர பகுதிக்கு செல்ல பல சாலைகள் இருப்பதால் இது தோராயமாக கவனிக்கப்படும் . மார்னிங்டன் பெனின்சுலாவிலிருந்து (mornington peninsula )தேவையில்லாத காரணங்களுக்காக யாரேனும் பெரு நகருக்குள் நுழைய நேர்ந்தால் அவர்களுக்கு $ 1652 அபராதம் விதிக்கப்படும்.

பஸ் ஸ்டாண்ட்களிலும் ,ரயில்வே ஸ்டேஷன்களிலும் பல அதிகாரிகள் மக்களை கண்காணிக்க நிறுத்தப்படுவார்கள். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ,யாராக இருந்தாலும், அவர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப்படுவார்கள். மேலும் ஒரே காரில் இரண்டு பெற்றோர்களை பார்த்தாலும் $ 10,000 அபராதம் என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

பிரதமர் Daniel Andrews, இந்த புதிய அபராதம் மற்றும் புதிய கட்டுப்பாடுகளுக்கு ரிங் ஆப் ஸ்டீல் “ring of steel” என்றும் விவரித்துள்ளார்.
விக்டோரியா நகரத்திற்குள் வைரஸ் பரவுவதையும், சட்டபூர்வமாக காரணம் இல்லாமல் சுற்றித் திரிபவர்களையும் அரசு கடுமையாக தண்டிக்கும் என்றும், இந்த கொரோனா வைரஸை அழிப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய போகிறோம் என்றும் கூறியுள்ளார்.