Breaking News

சட்டமன்ற பொறுப்புகளில் இருந்து வால்ட் செக்கர்டு விடுவிப்பு..!!

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தொழிலாளர் கட்சி உறுப்பினர் வால்ட் செக்கர்டு சட்டமன்ற பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Vault Checkered Release from Legislative Responsibilities

நியூ சவுத் வேல்ஸின் பாலின பாகுபாடு ஆணையர் எலிசபெத் ப்ரோடெரிக் வால்ட் செக்கர்டு மீது பணியிடங்களில் ஒழுங்கின்மையுடன் இருப்பது மற்றும் சக பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தருவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இதையடுத்து அம்மாநிலத்தின் தொழிலாளர் கட்சித் தலைவர் கிறிஸ் மின்ஸிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சக பணியாளர்களின் நலத்தை முன்னிடு வால்ட் செக்கர்டை எதிர்க்கட்சிக்கான சட்டமன்ற பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் வால்ட் செக்கர்டு மீதான புகார்கள் கிறிஸ் மின்ஸிடம் நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளன. அதன்காரணமாக குற்றச்சாட்டுக்களின் தன்மையை அவர் வெளிப்படுத்த மறுத்துவிட்டார். செக்கர்டு மீது குற்றச்சாட்டு தெரிவித்தவர்களின் அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர் கூறினார்.

கடந்த வெள்ளியன்று செய்தியாளர்களைச் சந்தித்த வால்ட் செக்கர்டு, பணியிடத்தில் தொழிமுறை அணுகுமுறையோடு நடந்துகொண்டு வருவதாகவும், தன் மீது தெரிவித்துள்ள புகார்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். மேலும் தனக்கு இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த செக்கர்டு, சட்டமன்ற ஊழியர்கள், நான் தவறாக நடந்துகொண்டதாக உணர்ந்தால், நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று வால்ட் செக்கர்டு தெரிவித்தார்.