வைரஸ் பாதிப்பின் தீவிரம் காரணமாக சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது படிப்படியாக தடுப்பூசி போடும் பணிகள் வேகம் எடுத்து வருகின்றன. அந்த வகையில் 80% தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் எல்லைகளை திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
சொந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், குடியுரிமை பெற்றவர்கள் அவர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தொழில்துறையினர் முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா செல்வதற்கான அனைத்து உதவிகளையும் ஆஸ்திரேலியா செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் நாடு திரும்புவதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும், குறிப்பிட்ட இலக்குகளில் தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்துவித நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறப்பெற்றுள்ளது. சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆஸ்திரேலியாவில் இதுவரை 77.3% பேர் ஒரு டோஸ் தடுப்பு ஊசி எடுத்துக்கொண்டு உள்ளதாகவும், 53.4 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அனைத்து மாணவர்களும் குறிப்பிட்ட இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பு ஊசி செலுத்தி முடியுமா என்று சந்தேகம் இருப்பதாகவும், அவசரத் தேவைகளுக்காக நாடு திரும்புபவர்கள் குறிப்பிட்ட மாகாணங்களில் விடுதி தனிமைப்படுத்துதலில் இருக்க வைக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மோரிசன் தெரிவித்துள்ளார்.
விடுதியில் தனிமைப்படுத்துவது ஒரு முக்கிய வாய்ப்பாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மற்ற நாடுகளில் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப உடனடியாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொழுதுகளில் தனிமைப்படுத்தும் திட்டத்தை தவிர்த்து வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதற்கான முன்னோட்டம் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா, விக்டோரியா உள்ளிட்ட மாகாணங்களில் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தும் அதற்கான திட்டங்களை செயல்படுத்த தொடங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இந்த வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். அக்டோபர் மாதத்திலிருந்து சர்வதேச விமானங்களின் இயக்கம் அதிகரிக்கப்படும் என்றும், சொந்த நாட்டுக்கு செல்ல விரும்புபவர்கள் தங்களது பயண ஏற்பாட்டை தொடங்கலாம் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
Link Source: https://bit.ly/2WtZ7Hn