Breaking News

முக கவசம் இனி உயிர் கவசம் …

Nurse wearing respirator mask holding a positive blood test result for the new rapidly spreading COVID

ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 803 ஆக உயர்ந்துள்ளது!!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 எனவும் சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று பரவலை சமாளிக்க அரசு பல்வேறு வழிகளில் முயற்சித்து வரும் நிலையிலும் ஒருசிலரின் அலட்சியத்தால் இது சிந்துபாத் கதை போல தொடர்ந்து கொண்டே போகிறது.

அந்த வகையில் இன்று புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இது கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதிக்கு பிறகு மிகக் குறைந்த அளவில் நோய்த்தொற்று பதிவாகி இருப்பது இன்று மட்டுமே என்பது சிறப்பு செய்தி .எனினும் இன்று 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நாடு முழுவதும் மொத்தமாக 803 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் இனிவரும் நாட்களில் படிப்படியாக தொற்று குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என தெரிகிறது.

மேலும் இதைப் பற்றி பிரிமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவிக்கையில் இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலுக்கு உரிய ஒன்று எனவும் அதை அரசு சாதுரியமாக செய்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து பிரிமியர் தெரிவிக்கையில் லாக்டவுனின் மூன்றாவது நிலையில் மட்டுமே அழகு நிலையங்கள் மற்றும் தனிப்பட்ட சேவை உட்பட்ட கடைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு கடைகள் திறக்கப்படும் போது மாஸ்க் அணிவது கட்டாயம் எனவும் பேசியல், பேசியல் டாட்டூ உள்ளிட்டவை செய்ய தடை எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல சலூன் கடைகளிலும் முக கவசம் அணிவது உள்ளிட்ட விதிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மெல்போர்ன் எப்பொழுது இரண்டாம் கட்டத்தை நெருங்குகிறதோ அப்பொழுது செல்லப்பிராணிகளுக்கு தேவையான பொருட்களை வாங்கும் கடைகளும் திறக்க வாய்ப்புள்ளது அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி முதல்.

மெக்டொனால்டின் கார் பூங்காக்களை மேற்பார்வை இடுவது , பாப்-அப் கூட்டங்களை கண்டிப்பது , சட்டவிரோதமான வீட்டுக் ஜாலி பார்ட்டிகளை கண்காணிக்க நூற்றுக்கணக்கான காவலர்களையும் நூற்றுக்கணக்கான மணிநேரங்களை செலவிடுமாறு போலீசாரைக் இனி கேட்கப்போவதில்லை என்று மிகவும் கோவமாக ஆண்ட்ருஸ் கூறி உள்ளார் . “இவை அனைத்தும் போலிஸ் நேரத்தை வீணடிப்பதாகும், அது வைரஸை பரப்புவதைத் தவிர வேறு எதுவும் செய்ய போவதில்லை.” என்று தீர்க்கமாக சொல்லி உள்ளார் .

மெட்ரோ மெல்போர்னில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன்களும் விக்டோரியா பகுதியில் அவர்கள் கொடுக்கும் ஒத்துழைப்பினை பொருத்து கொரானா எண்ணிக்கையை கண்கூடாக பார்த்து வருகின்றனர்.
விக்டோரியன் NSW பார்டர் டவுன் ஆப் எச்சுகா பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று கொடுத்த தகவலின்படி தொடர்ந்து நெகட்டிவ் ரிசல்ட்டை கொடுத்து உள்ளது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

செப்டம்பர் 28 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர், தினசரி தொற்றுநோய்களுக்கான சராசரி 50 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே நம்பிக்கை வரும் என்றும் சொல்ல படுகிறது . உலக நாடுகள் அனைத்தும் லாக் டவுன் டென்ஷன்ஸ் குறைவாக ஆகி கொண்டு இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அரசு மட்டும் கொஞ்சம் அதிகம் கெடுபிடி கொடுப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கிறது .