Breaking News

குடியுரிமை திட்டத்தில் மாற்றங்கள் ! ஆஸ்திரேலியாவிற்கு புதிதாக வரும் மக்களுக்கு அதிக வாய்ப்புகள் !

குடியுரிமை சோதனையில் பெரிய மாற்றங்கள்! ஆஸ்திரேலிய மதிப்புகளுக்கு முக்கியத்துவம் !

ஆஸ்திரேலியாவின் குடியுரிமை சோதனைகள் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது, ஏனெனில் மத்திய அரசு நாட்டு மக்களின் குடியுரிமை மற்றும் வாழ்வியலை குறித்து கூடுதல் கேள்விகளை அறிமுகப்படுத்துகிறது.

இந்த புதிய திட்டத்திற்கு கீழ், நாட்டு மக்களிடம் ஆங்கில மொழியின் தேவை, வாக்களிப்பது நாட்டுக்கு எவ்விதமான தேவை மற்றும் மற்றும் அந்நாட்டின் மத ரீதியான சட்டங்களை குறித்து கேள்விகள் கேட்கபடும் என்று கூறப்படுகின்றது. இந்த சட்டம் ஆஸ்திரேலியா மக்களின் ஆங்கில மொழியை மேலும் கூடுதல் பலம் ஊட்டும் என்று பிரதமர் Scott Moriss கூறியுள்ளார்.

இந்த புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டால், ஆங்கில மொழி நன்றாக சீராகும், இதனால் ஆஸ்திரேலியாவிற்கு குடிவரும் மக்களுக்கு இந்நாட்டில் வாழ ஒரு நல்ல சூழல் அமையும் என்று பிரதமர் கருதுகிறார்.இதனால் புதிதாக ஆஸ்திரேலியா வரும் மக்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வியல் உருவாகும் என்றும் அவர் கூறி உள்ளார்.

அதே சமயம் இச்சட்டத்தால் ஆஸ்திரேலியாவின் சொந்த மக்கள் எந்த விதமான பாதிப்பும் சந்திக்க கூடாது , மற்றும் புதுப்பிக்கப்பட்ட குடியுரிமை சோதனையானது, புதிய மற்றும் மிகவும் அர்த்தமுள்ள கேள்விகளைக் கொண்டிருக்கும், இது சாத்தியமான குடிமக்கள் பேச்சு சுதந்திரம், பரஸ்பர மரியாதை, வாய்ப்பின் சமத்துவம், ஜனநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற நமது மதிப்புகளைப் புரிந்துகொண்டு அர்ப்பணிக்க வேண்டும்.

ஏனெனில் ஆங்கில மொழியில் எந்த மாற்றங்களும் குடியுரிமைக்கான தேவைகளும் இருக்காது என்று குடிவரவு செயல் அமைச்சர் Alan Tudge கூறியுள்ளார். COVID-19 தொற்றுநோயின் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், மார்ச் 31 முதல் 85,000 க்கும் அதிகமானோர் ஆஸ்திரேலிய குடிமக்களாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.