Breaking News

பழங்குடினச் சிறுவன் தாக்கப்பட்ட வழக்கு- பரபரப்பை கிளப்பும் வீடியோ ஆதாரம்..!!

வெறும் 15 வயதான சிறுவன் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காவலர் பணி செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டு நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

Tribal Boy Assault Case- Shocking Video Evidence

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி சர்ரி மலைப்பகுதியில் இருக்கும் வார்டு பூங்கா என்கிற இடத்துக்கு முதல்நிலை காவலர் பர்லோ, 2 பயிற்சி காவலர்களுடன் சென்றுள்ளார். அந்த பூங்காவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் இருந்துள்ளனர். உடனடியாக அவர்களிடம் காவலர் பர்லோ விசாரித்துள்ளார்.

அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் காவலர்களுக்கும் சிறுவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நான்கு சிறுவர்களில் 16 வயதான ஒருவர் அந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய தொடங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக தன்னுடன் வாக்குவாதம் செய்த15 வயது சிறுவனை காவலர் பர்லோ தாக்கியுள்ளார்.

Tribal Boy Assault Case- Shocking Video Evidence.அதையடுத்து கீழே விழுந்த சிறுவனையும் உடனிருந்த மற்ற சிறுவர்களையும் காவலர்கள் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சிட்னி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பழங்குடிகள் என்று தெரிந்து காவலர் பர்லோ தாக்கியதாகவும், இதனால் தனக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு தினசரி பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அந்த சம்பவம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ நீதிமன்றத்தில் ஒளிபரப்பட்டது. அதில் சம்மந்தப்பட்ட 15 வயது சிறுவன் காவலர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதும், அதை தொடர்ந்து காவலர் பர்லோ அச்சிறுவனை தாக்குவதும் உள்ளிட்ட காட்சிகள் பதிவாகி இருந்தன. அதற்கு நீதிமன்றத்தில் மறுமொழி கூறிய சிறுவன், காவலர் பர்லோ தன்னிடம் நடந்துகொண்ட விதம் சரியில்லை. அதனால் கோபமுற்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறினார்.

மேலும், அதனால் ஆத்திரமுற்ற காவலர் பர்லோ தன்னை கையை பிடித்து முறுக்கி தோள்பட்டை எலும்பை உடைத்துவிட்டதாகவும், அதனால் சுயநினைவு இழந்துவிட்டதாகவும், நினைவு திரும்பிய போது ரத்த வாந்தி எடுத்ததாகவும், தன்னுடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதையடுத்து நீதிமன்றம் பர்லோ மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவரிடம் கேள்வி எழுப்பியது. சிறுவனின் குற்றச்சாட்டுக்களை ஏற்கப்போவதில்லை என்றும், தான் செய்தது தவறு கிடையாது என்றும் நீதிமன்றத்தில் கூறினார்.

இருதரப்பு வாதாங்களையும் கேட்டுக்கொண்ட மாவட்ட நீதிமன்றம் இவ்வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. மேலும், காவலர் பர்லோ தனது பணியை தொடருவதற்கு எந்தவித தடையும் கிடையாது என்று உத்தரவிட்டது. விரைவில் இவ்வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.