Breaking News

சுறா மீன் தாக்குதலில் நண்பனுக்கு காயம் – அடுத்து சிறுவன் செய்த செயல்..!!

சுறா மீன் தாக்குதலால் காயமடைந்த நண்பனை 2 கி.மீ முதுகில் சுமந்து வந்து மருத்துவமனையில் அனுமதித்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Friend Injured In Shark Attack - What The Boy Did Next

மேற்கு ஆஸ்திரேலியாவி அல்பனி பகுதியில் இருக்கும் தெற்கு கடற்கரையில் லூக் பாஸ்கோ என்கிற 17 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு 5 மீட்டர் தொலைவில் வந்த வெள்ளை சுறா ஒன்று லூக் பாஸ்கோவை தாக்கியுள்ளது.

Friend Injured In Shark Attack - What Boy Did Next.அப்போது அருகாமையில் இருந்த லூக்கின் நண்பர் கானர் ஷிர்லீ தாவி குதித்து நண்பனை காப்பாற்றியுள்ளார். அதை தொடர்ந்து லூக்கை முதுகில் சுமந்து கொண்டு, சுமார் 2 கி.மீ தூரம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். லூக் பாஸ்கோவை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை ஆபத்தில் இருந்து காப்பாற்றினர். அதை தொடர்ந்து பேசிய லூக், தனது வாழ்நாள் முழுவதும் நண்பர் ஷிர்லீக்கு கடமைப்பட்டுள்ளேன். இப்படியொரு நண்பனை பெற அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று கூறினார்.

நண்பர் லூக்கை காப்பாற்றியதை குறித்து பேசிய கானர், ஆபத்தான காலங்களில் உயிர் காக்கும் முதலுதவி தருவது குறித்து ஏற்கனவே எனக்கு பள்ளிக்கூடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதை வைத்து நண்பனை காப்பாற்றினேன் என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதை தொடர்ந்து கானர் ஷிர்லீக்கு பலரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர். இதற்கிடையில் லூக் பாஸ்கோ நலமுடைய பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.