Breaking News

கொரோனா பாதிப்பு குறைந்தது ! கடந்த இரண்டு மாதத்தில் இறப்பு ஏதும் இல்லை !

படிப்படியாக குறைந்த கொரோனா பாதிப்பு !சந்தோஷத்தில் ஆஸ்திரேலியா !

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இரண்டு மாதங்களில் முதல் முறையாய் கொரோனா வைரசால் மரணம் ஏதும் ஏற்படவில்லை என்று சுகாதார குழு அறிவித்து உள்ளது.அதனால் இதுவரை இருந்த ஊரடங்கு உத்தரவில் கட்டுப்பாட்டிற்கு மூன்றாம் கட்ட தளர்வுகளை அமல் படுத்த முடிவு செய்துள்ளார் பிரதமர் டேனியல் ஆண்டுரூஸ்.

கடைசியாக ஜூலை மாதம் 13ஆம் தேதி அன்று கொரோனாவால் எந்த விதமான மரணமும் இல்லை என்று பதிவுகள் சொல்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் தினசரி இறப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது. இந்த வைரஸால் தேசிய அளவின் இறப்பின் எண்ணிக்கை 816 ஆக உள்ளது , இதில் 729 பேர் விக்டோரியா மாகாணத்தை சேந்தவர்கல் என்பதும் குறிப்பிடத்தக்கது.கடந்த 24 மணி நேரத்தில்அம்மாகாணத்தில் 42 பேருக்கு தோற்று உள்ளது என்று உறுதிபடுத்தி உள்ளது.

கிட்டத்தட்ட 820 விக்டோரியாவை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதில் 11 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.இந்த மூன்றாம் கட்ட தளர்வின்படி பயணங்கள், உணவகங்கள், சலூன்கள், சமூக விளையாட்டு, சமூக விழாக்கள் சமூக இடைவெளியுடன் (social distancing ) செயல் படலாம் என்று சுகாதார குழு தெரிவித்து உள்ளது.

சிறிய விழாக்களில் 50 பேர் வரை சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ளலாம் மற்றும் பெரிய விழாக்களில் 70 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தபட்டுள்ளது . மேலும் ஊரடங்கு உத்தரவின்படி இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.மேலும் தினசரி பாதிப்பு 35 முதல் 50 சதவீதம் வரை குறைந்தால் தளர்வுகள் கொடுக்கப்படும் என்று பிரதமர் டேனியல் கூறு உள்ளார்.