Breaking News

ஆஸ்திரேலியாவில் முதல் கொரோனா தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டு இதுவரை ஒரு வருடம் ஆகியுள்ளதால் மருத்துவ சுகாதார ஊழியர்கள் நிறைய விஷயங்களை கற்று கொண்டனர்!

கொரோனா தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டு இதுவரை ஒரு வருடம் ஆன நிலையில் மீண்டும் தொற்று பாதிப்புகள் இருப்பதால் மருத்துவர்கள் தற்போது அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

coronavirus

 

ஆஸ்திரேலியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றின் முதல் நபர் வுஹானைச் சேர்ந்த ஒருவர் என சுகாதார அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தற்போது, நியூ சவுத் வேல்ஸில் மேலும் மூன்று பேருக்கு பரிசோதனை செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் சீனாவிலிருந்து வந்திருந்த 60 வயது நபர், மேற்கு சிட்னியின் Westmead மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது ஒரு புதிய நோய் என்பதால் நோயாளிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சிகிச்சையளிப்பதில் சிறந்த வழி என்ன என்பதை நாங்கள் கண்டுபிடித்துக்கொண்டிருந்தோம். “நாங்கள் என்ன வகையான சிகிச்சைகள் தருகிறோம் என்பது எங்களுக்குத் தெரியாது, வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்ட பல சிகிச்சைகள் இருந்தன, அவற்றை நாங்கள் முயற்சிக்கிறோம். அதேநேரத்தில் நோயாளிகளுக்கு எது சிறந்தது என்று தெரியாததால் பயமும் ஒருபுறம் இருப்பதாக, Westmead intensive care specialist George Zhou செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது ஒரு சவாலான ஆண்டு வைரஸால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களில் மேற்கு ஆஸ்திரேலிய தம்பதியினர் Irais மற்றும் Walmir Ramalho ஆகியோர் உள்ளனர். இவர்கள் Diamond Princess cruise ship -ல் தங்களின் 50 வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது பாதிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் தம்பதியினர் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவதற்கு முன் 700 க்கும் மேற்பட்ட நபர்கள் கப்பலில் ஏற்பட்ட தொற்றுடன் சேர்க்கப்பட்டனர். சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் தற்போது ஒரு ஆராய்ச்சி திட்டம் நடைபெற்று வருவதால், வைரஸின் நீண்டகால பாதிப்புகள் குறித்து மேலும் அறிந்துகொள்ள மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த மாதங்களில் COVID-19 தொற்று அறிகுறிகளால் கண்டறியப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் வரை கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த கொரோனா பாதிப்புகள் வெளிநாட்டில் இருந்து வருபவர்களாலும், ஹோட்டலில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் மூலமும் வெளியேறுகின்றன. இதனால் ஆஸ்திரேலியாவின் சர்வதேச எல்லை மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாடு முழுவதும் புதிய தொற்று பாதிப்புகள் தொடர்ந்து வருவதால் மாநிலங்களும் பிரதேசங்களும் உள்நாட்டு பயணத்தைப் பொறுத்தவரை வெவ்வேறு விஷயங்களைச் செய்து வருகின்றன. மீண்டும் இயல்பு நிலை மாற சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் இருக்கும் நிலையில், இது நிச்சயமாக ஒரு சவாலான ஆண்டு” என்று டாக்டர் Zhou கூறினார்.

ஆஸ்திரேலியாவின் மிகக் கடுமையான இரண்டாவது அலையான COVID-19 ஆல், விக்டோரியாவில் கிட்டத்தட்ட 800 பேர் இறந்துவிட்டனர். எனவே சுகாதார அதிகாரிகள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. வடகிழக்கு மெல்போர்ன் புறநகர்ப் பகுதியான Heidelberg-கில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனையின் COVID மருத்துவ ஆலோசகர் Nick Jones , வைரஸ் குறித்த சமீபத்திய தகவல்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதற்கும், அவர்கள் சிறந்த சிகிச்சையை அளிப்பதை உறுதி செய்வதற்கும் இது ஒரு “நிலையான போர்” என கூறினார்.

இதையடுத்து மெல்போர்னின் முதல் தொற்று குறித்தும், தற்போதுள்ள இரண்டாவது அலையாக ஏற்பட்டுள்ள தொற்று பாதிப்பு குறித்தும் அறிந்து, கொரோனா வைரஸ் சிகிச்சை செய்யமுறைகளை எவ்வாறு அமைப்பது குறித்து செயல்படும் வேலையில் டாக்டர் ஜோன்ஸ் ஈடுபட்டுள்ளார்.