Breaking News

விக்டோரியாவில் கணிசமாக குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு !

கட்டுக்குள் வந்த கொரோனா வைரஸ் !உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமானது பிரதமர் ஆண்ட்ரூஸ் பெருமிதம் !

விக்டோரியாவில் கொரோனா தாக்குதலினால் ஏழு பேர் மரணமடைந்துள்ளனர். 35 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது . வைரஸ் தாக்குதல் கணிசமாக குறைந்து இருப்பதால், அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தி உள்ளது . மேலும் தேசிய அளவில் எண்ணிக்கையாக 817 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அரசு சாமர்த்தியமாக செயல்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நோய்த் தொற்றையும் உயிரிழப்பையும் குறைத்து மக்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது

பெரும்பாலும் வயதானவர்களே இந்த தொற்று காரணமாக அதிகமாக பாதிப்பு அடைந்து உள்ளனர் . தற்போது 513 தொற்று நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.725 கொரோனா தொற்றில் இருந்து தற்போது 30தாக இறங்கி உள்ளது. இது ஒரு பெரிய முயற்சி என்று ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார்.

இவ்வாறு கொரோனா தொற்று கணிசமாக குறைந்ததற்கு மக்களாகிய நீங்கள் மட்டுமே காரணம் என்றும், அரசு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு விதிமுறைகளையும் நீங்கள் பின்பற்றியதால் தான் இந்த தொற்றிலிருந்து அனைவரும் மீண்டு வரமுடியும் என்றும் பெருமையாக சொல்லி உள்ளார் , கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கீழ் நோக்கி வருகிறது என்று சந்தோஷத்தோடும் கூறியுள்ளார் ஆண்ட்ரூஸ்.மேலும் விக்டோரியாவில் எந்த ஒரு புதிய தொற்று கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் வரும் திங்கட்கிழமை முதல் மெல்போர்னில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தனியாக வசிப்பவர்கள் அல்லது ஒரு பெற்றோர் ( single parent ) உள்ளவர்கள், பார்வையாளருடன் வெளியே செல்லவும், உடற்பயிற்சி செய்யும் ஜிம்களுக்கும், இரண்டு மணி நேரம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானங்கள் மீண்டும் திறக்கப்படும் என்றும், இந்த ஊரடங்கு கால நிலை இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிக்கு வரை இருக்கும் என்று அறிவித்து உள்ளது .

கொரோனா பாதிப்பு அடுத்த கட்டமான 40 முதல் 50 வரை வீழ்ச்சி அடைந்தால் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அடுத்த கட்ட புது ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

பொருளாதார ரீதியாகவும்,வருமான ரீதியாகவும் அனைவரும் பாதிக்கபட்டதனால் ,தொழிலாளர்களுக்கு அரசாங்கம் பல கட்டண தள்ளுபடிகளையும், வசதி இல்லாதவர்களுக்கு பண மானியங்களையும் அளித்துள்ளது என்று டானியல் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார். ஒரு ஆண்டுக்கு $10 மில்லியன் வரை வருமானம் பெறும் வேலைகளுக்கு, ஒரு வருடம் வரை வரி கட்டுவதற்கான கால அவகாசம் இருக்கும். மொத்தத்தில் மாநில அளவில் $1.7 பில்லியன் செலவுகள் இருக்கும் என்று கூறப்படுகின்றது, இந்த வணிக கட்டமைப்புகளை வணிக குழுக்கள் பெரும் ஆதரவு அளித்தது, ஆனால் மாநிலத்தை மீண்டும் திறக்குமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கையும் விடுத்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமை சில பகுதிகளில் பதற்றமான சூழலும் பரவியது. “கொரோனா கோ கோ” என்று மனதில் எல்லோரும் சொல்வது பல இதயங்களுக்கு கேட்கிறது .நம்பிக்கை தானே எல்லாம் .