Breaking News

லாக் டவுன் விதிகளை மீறிய மூன்று பேர் அதிரடி கைது !

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா பிரச்சினை , விக்டோரியா நகரை அதிக அளவில் பாதிப்படையச் செய்துள்ளது. இந்த தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.இந்த சட்டத்திற்கு ஒத்துழைக்காமல் சிலர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அப்போது இச்சட்டத்தை எதிர்த்து போராடிய மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.அதனால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது .

சனிக்கிழமை அன்று Yarra ஆற்றங்கறையில் நடந்து வந்த சிலர் “வெளியே வருவது எங்களின் உரிமை” என்று கூறியதாக தெரிகிறது அதனால் அவர்களை கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.ஏஏபி புகைப்படக்கலைஞர் ஒருவர் மூன்றுபேரை பார்த்ததாகவும், அதில் சிலருக்கு கை விலங்குகள் போடப்பட்டு இருந்ததாகவும் ,இன்னும் சிலர், அதிகாரிகளால் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகின்றது.

இந்த தொற்றில் இருந்து மீண்டு வர பல நடவடிக்கைகளை அரசு எடுத்த போதிலும், அதனை சிறிதும் கண்டு கொள்ளாமல் சிலர் வெளியே சுற்றித் திரிவதை போலீஸார் பெருமளவு கண்டித்து வருகின்றனர். கடந்த வார இறுதியில் நினைவாலயத்தில் இந்த ஊரடங்கு சட்டத்தை எதிர்த்து போராட்டமும் நடத்தினர். அப்பொழுது 17 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சுகாதார விதிமுறைகளை மீறியதற்காக கிட்டத்தட்ட 160 பேருக்கு மேல் பலருக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டன.

இந்த ஊரடங்கை எதிர்த்து யாரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று பலமுறை பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் மக்களிடம் தெரிவித்துள்ளார்.இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டால், நீங்களே வைரஸை பரப்புவதற்கு சமம் என்று வெள்ளிக்கிழமை அவர் கூறியுள்ளார்.

இதே போல் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட 43 வயதான டோனி பெகோரா என்பவரை வியாழன் கிழமை அன்று போலீசார் கைது செய்தனர். அவரிடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் பல கடுமையான வார்த்தைகளை பேசியதாகவும், உங்கள் தயவில் வாழ்வதைவிட இறப்பதே நல்லது என்று அவர் கூறியதாக தெரிகிறது. “it would be better to die on your feet than live on your knees”. என்று அவர் சொன்னதை பலரும் பல விதத்தில் சைலண்டாக முணுமுணுக்கின்றனர் .

வெள்ளிக்கிழமை அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் மேலும் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. அதற்கான சில விதிமுறைகளையும் கோர்ட் அவருக்கு விதித்துள்ளது. அதாவது சமூக ஊடகங்களையும் அதற்கு இணையான எந்த ஒரு அமைப்புகளையும் அவர் தொடர்பு கொள்ளவும் பயன்படுத்தக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தனர்.

இந்த ஊரடங்கு உத்தரவை பலர் எதிர்த்தாலும். இந்த ஊரடங்கால் மட்டுமே , பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சனிக்கிழமை அன்று 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் 6 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த பதிவு ஜூன் 26ஆம் தேதி முதல் எடுத்த கணக்கின்படி கணிசமாக குறைந்துள்ளது.தொற்றின் பாதிப்பு குறைந்து இருந்தாலும் இதனை முழுமையாக விரட்டியடிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. உத்தரவை மதிக்க வேண்டும் என்றும் ,கொரோனாவை வெல்ல வேண்டும் என்றும் அரசு தினம் தினம் மக்களிடம் கோரிக்கை வைத்துக் கொண்டே தான் இருக்கின்றது .