Breaking News

கொரோனா காலத்தில் அரசின் நிதியுதவியை பெற்ற நிறுவனங்களின் பெயர்களை வெளியிட மறுக்கும் வரி ஆணையர் மீது செனட் உரிமைக்குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

The Senate Rights Commission has launched an investigation into a tax commissioner who refused to release the names of companies that received state funding during the Corona period.

கொரோனா காலத்தில், பல்வேறு தொழில் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. அந்த நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்கள் மூலமாக உதவித்தொகை வழங்கப்பட்டது. ஜாப் கீப்பர் நிதியின் கீழ் பெரும்பாலான நிறுவனங்கள் பயன்பெற்றன. ஆனால் பேரிடர் காலத்தில் லாபம் ஈட்டிய நிறுவனங்களும் அரசின் நிதி உதவியை பெற்றதாகவும், செனட் உறுப்பினர் ரெக்ஸ் பேட்ரிக் குற்றச்சாட்டை முன்வைத்தார். எனவே அவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் பேட்ரிக் கோரிக்கை விடுத்து வந்தார்.

The Senate Rights Commission has launched an investigation into a tax commissioner who refused to release the names of companies that received state funding during the Corona period..ஆனால் தனி நபர் ரகசியம் காத்தலின் சட்டப்படி அது போன்ற நபர்களின் விவரங்களை வெளியிட வரிதுறை ஆணையர் கிரிஸ் ஜோர்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால் செனட்டர் ரெக்ஸ் பீட்டரின் தீர்மானத்திற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததால் தகவலை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது வரித்துறை. ஆனால் , நிதி உதவி பெற்ற நிறுவனங்களின் பெயர்களை வரித்துறை மறுப்பு தெரிவித்துள்ளதால், செனட் உரிமைக்குழு வரித்துறை மீது உரிமை மீறல் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிஸ் ஜோர்டன், செனட் குழுவின் மீது தான் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், ஆனால் தனி நபர் தகவலை காப்பது வரித்துறையின் கடமை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள செனட்டர் பேட்ரிக், மக்கள் வரிப்பணத்தில் உதவி பெற்றவர்களின் விவரங்களை நியூசிலாந்து வெளியிட்டதை போல, வரித்துறையும் வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/30LKf93