Breaking News

உங்கள் எண்ணமே உங்களின் வயதை தீர்மானிக்கிறது என்று கூறி விருதை ஏற்க மறுத்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்.

பிரிட்டனை சேர்ந்த The Oldie என்ற இதழ் 1992 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 95 வயதான இரண்டாம் எலிசபெத் ராணிக்கு இந்தாண்டுக்கான The Oldie விருதை வழங்க விரும்புவதாக அந்த பத்திரிக்கையின் விருது இயக்குனர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். ராணியின் தனி செயலாளர் எட்வர்ட் யங் அவர்களுக்கு கடந்த ஜூலையில் இந்த கடிதம் எழுதப்பட்டது.

Queen Elizabeth II of England refuses to accept the award, claiming that your age determines your age
இதற்கு ராணியிடம் இருந்த கடந்த ஆகஸ்ட் மாதம் பதில் கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் ராணி குறிப்பிட்டுள்ளதாவது, உங்களின் எண்ணமே உங்களின் வயதை தீர்மானிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் உங்களின் விருதுக்கு பொருத்தமானவராக நான் இருக்க வாய்ப்பில்லை என்றும், இந்த விருதை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருதை பெருவதற்கு பொருத்தமானவர்கள் நிறைய பேர் உள்ளதாகவும் ராணி இரண்டாம் எலிசபெத் குறிப்பிட்டுள்ளார்.

இதே விருதை ராணியின் மறைந்த கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த 2011ல் பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டுக்கான இந்த விருதை பிரெஞ்ச்- அமெரிக்க நடனக் கலைஞரான Leslie Caron பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3pnzWT0