Breaking News

திறந்த வேலை வாய்ப்பு நிகழ்ச்சி வேலை தேடுபவர்களுக்கு வீட்டின் கதவை தட்டுவது போல உள்ளது- மக்கள் நெகிழ்ச்சி !

The open placement program is like knocking on the door for job seekers

ஆஸ்திரேலியாவின் திறந்த வேலை வாய்ப்பு நிகழ்ச்சி வேலை தேடுபவர்களுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
16 வார குறைவாக பிறந்த, 24 வயதுடைய Kelsey Carlisle தனது வாழ்நாள் முழுவதும் அறிவுசார்பற்றவராக இருந்து வருகிறார். அவர் இந்த வாய்ப்பு பற்றி கூறுகையில், வேலைத்தேடி அலைவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த Covid- 19 ல் இன்னும் மோசமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு வந்த கொரோனாவினால் என்னுடைய வேலையை இழந்து விட்டேன். அதிலிருந்து எனது வாழ்க்கை மிகவும் போராட்டமாக அமைந்தது. இந்த வேலை வாய்ப்பு திட்டம் வேலை தேடுபவர்களுக்கு அவரது வீட்டின் கதவை தட்டுவது போல ஓர் அரிய வாய்ப்பை தருகிறது என்று கூறினார்.

open placement program is like knocking on the door for job seekersவிக்டோரியாவில் வேலை தேடும் பின்தங்கிய 25 நபர்களில் இவரும் ஒருவர். ஆஸ்திரேலிய திறந்த லாபமற்ற நோக்குடன் செயல்படும். JobsBank, டென்னிஸ் ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா அரசால் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலை கிடைத்தது.

மேலும் Ms Carlisle கூறுகையில், மெல்பர்ன் பூங்காவில் தனது வேலை வாய்ப்பு முன்னேறி செல்லும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார். மேலும் என்னுடைய தற்குறிப்பு (Biodata) பார்க்கும்பொழுது ஆஸ்திரேலிய Openல் வேலை செய்திருப்பதால் தனக்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.

JobsBank chief executive Corinne Proske கூறும்பொழுது, இந்த திட்டத்தால் குறைபாடு உள்ள மக்கள், பழங்குடி இன ஆஸ்திரேலியர்கள், இளைஞர்கள், வெகு நாட்களாக வேலை இல்லாதவர்கள் மிகவும் பயன்பெறுவார்கள். இது மிகவும் அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாக அமைந்திருப்பதாக தெரிவித்தார்.

French-லிருந்து குடிபெயர்ந்த Rebecca Desiree ஆஸ்திரேலியாவிற்கு வந்து 20 மாதங்களுக்கு முன்னர் வேலையில் சேர்ந்தார்.அவர் கூறுகையில், நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எல்லாம் சரியாகி விடும் என்று என் கணவர் கூறி இரண்டு வாரம் விடுப்பு எடுத்துள்ளார்.
கொரோனாவால் நலிவடைந்த தொழில்களில் ஒன்றான பயணம் மற்றும் சுற்றுலாத்துறையில் டிப்ளமோ முடித்த Lauren Quittner-ரும் இந்த திறந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். இந்தஅற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது மிகவும் மகிழ்ச்சி என்றார்.

Victorian Employment Minister Jaala Pulford கூறுகையில், இதில் பங்கேற்பவர்களுக்கு அவர்களுடைய பணிகளுக்கு முன்பே அதற்கான தயாரிப்பு வழங்குகிறோம். இதனால் அவர்களின் பணி அமைப்பை உருவாக்கி அதில் வெற்றியடைந்துள்ளோம். இதைப்பற்றி Australia Open கருத்து தெரிவிக்கலாம். இதனால் இதை போன்ற நிகழ்ச்சிகளை அமைக்க முடியும். பல சவால்கள் இருந்தாலும், இதை எவ்வாறு எதிர்வரும் ஆண்டில் அனைவரும் பயன்படும் வகையில் அமைக்கலாம் என எண்ணுகிறோம் என்றார்.

இந்த ஆஸ்திரேலியா ஓப்பன் அமைப்பாளர்கள் இந்த வேலை வாய்ப்பு திட்டம் டென்னிஸ் சேர்ப்பதை ஊக்குவிப்பதாக உள்ளது என்று கூறினார். திங்களன்று தொடங்கிய இந்த ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை கொரோனாவால் குறைவாகவே உள்ளது. மெல்பர்ன் பூங்காவிற்கு 30,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். நடக்க வேண்டிய போட்டிகளும் மூன்று வாரத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவினால் பயணம் தடை செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.