Breaking News

ஆஸ்திரேலியா குடிமக்களின் பெற்றோர்கள் நாட்டிற்கு நுழைய அனுமதி இல்லை-கடுமையான கட்டுப்பாட்டில் ஆஸ்திரேலியா !

2019 ஜூலை-ல் ஆஸ்திரேலியாவில் கடைசியாக Rajshree Patel-லும் அவரது மகன் Nevaan-னும் ஒன்றாக இருந்தனர். அவரது குழந்தை தனது தாத்தா பாட்டியுடன் இந்தியாவிற்கு செல்வதற்கு முன்பு தான் அவர் தனது இளங்களை நர்சிங் படிப்பை முடித்தார். மேலும் 18 மாதங்களாக தனது மகனை பரிந்து இருக்கின்றார்.

31 வயதான ராஜ்ஸ்ரீ 8 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார், மேலும் 2018ல் குடிமகனாக ஆனார். கடந்த ஆறு மாதங்களாக சிட்னியில் உள்ள Covid-19 சோதனை கிளினிக்கில் பணிபுரிந்து வருகிறார். Nevaan ஆஸ்திரேலியாவில் பிறந்தார் மற்றும் ஒரு ஆஸ்திரேலியா குடிமகன், ஆனால் தனியாக செல்ல போதுமான வயது இல்லை. மேலும் ஒரு குடிமகன் மற்றும் நாட்டின் நிரந்தர குடியிருப்பாளர்களின் உடனடி குடும்பம் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Parents of Australian citizens are not allowed to enter the countryRajshree Patel-ன் சமீபத்திய விண்ணப்பத்தில் அவரது தாயார் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் தந்தை அனுமதிக்கப்படவில்லை அதனால் தனது தாய் தந்தையை பிரிக்க விருப்பம் இல்லை என்று கூறினார்.

உடனடி குடும்பம் விதியை மாற்றுவதற்கு பல குடும்பங்கள் ஒரே நிலையில் இருக்கின்றன, மேலும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் பாராளுமன்ற மனுவில் இருந்தது. பிப்ரவரி 22 அன்று பிரதிநிதிகள் சபைக்கு இந்த பதில் முறையாக வழங்கப்படும் என்ற செய்திகள் கூறுகிறது.

மேலும் ஒரு ஆஸ்திரேலியா குடிமகன், ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்காக பயண விலக்கிற்க்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது.உள்துறை தனது இணையதளபக்கத்தில் கூறியதாவது, ஆஸ்திரேலியா சமூகத்தில், ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆஸ்திரேலியா கடுமையான எல்லை நடவடிக்கைகளை கடைபிடிக்கிறது என கூறியுள்ளார்.

MP Julian Hill-கூறுகையில், தற்போதைய நிலைமை ஆஸ்திரேலியாவுக்கு போதுமானதாக இல்லை. மேலும் கடந்த ஆண்டு பிரதமர் தனது பணியை சரியாகச் செய்திருந்தால்,இந்தக் குடும்பங்கள் இவ்வளவு நாளாக கொடூரமாக பிரிந்து இருப்பதை நாங்கள் பார்த்திருக்க மாட்டோம் என விமர்சித்துள்ளார் .