Breaking News

NSW பாராளுமன்றத்தில் 6வது வருடமாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா !

Pongal

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் முதலாவதாக இருக்கின்றது தை மாதத்தில் வரும் பொங்கல் பண்டிகை.
இந்த பண்டிகை உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகை சிறப்பதற்கு மிக முக்கிய காரணம், உழைக்கும் மக்களுக்கான பண்டிகையாகவும், உழைக்கும் வர்க்கத்தினர் இயற்கை தெய்வமான சூரியனை வழிபடுவதற்கும், மற்ற உயிரினங்களுக்கு நன்றி சொல்லும் திருநாளாகக் கொண்டாடப்படுவதால் தான்.

pongal australia

தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களான தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, மொரீசியஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது சென்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழ் கலை மற்றும் கலாச்சார சங்கம் பொங்கல் விழாவை NSW பாராளுமன்றத்தில் 6வது வருடமாக நடத்தியது. இவ்விழாவில் ஆஸ்திரேலியா சேர்ந்த கவுரவ பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதில் அமைச்சர் Dr. Geoff Lee, எதிர்கட்சி தலைவர் Jodi Mckay, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்திய துணைத்தூதர் திரு.மணீஷ்குப்தா ஆகியோருடன் முன்னணி இந்திய கலைஞரான Trostyky Marudu மருதப்பன் ஆகியோர் தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தின் 10வது ஆண்டை தொடங்கும் விதமாக பல கலை பணிகளை அறிமுகப்படுத்தினார்கள்.கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்பட்ட இந்த விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Pongal festival was celebrated in NSW parliament -photos goes viral in social media

இவ்விழாவில் கொரோனா காரணமாக மக்கள் குறைவாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட பலரும் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து வந்திருந்தனர்.இவர்கள் சிறப்புரையாற்றிய புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.கொரோனா காரணத்தினால் மிகவும் குறைவான முக்கிய பிரமுகர்களே இந்த விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.