Breaking News

மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்படவே நான் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டேன் -பிரதமர் !

first Pfizer corona vaccine given to Prime Minister Scott Morrison

ஆஸ்திரேலியா முழுவதும் தொடங்கவிருக்கும் Covid 19 க்கு எதிரான Pfizer தடுப்பூசியை முதலாவதாக செலுத்திக் கொள்ள பிரதமர் Scott Morrison, Australian flag-themed face mask அணிந்து வந்தார். தடுப்பூசி செலுத்தும் முன் அவருடைய உடல்நிலை, medical history பற்றி கேட்டறிந்தனர்.இவருடன் இரண்டாம் உலகப்போரில் உயிர் தப்பியவரும், 84 வயதுடைய Jane Malysiak என்பவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முதன்முதலாக தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்களில் இவர்கள் இருவரும் அடங்குவர்.

இதைபற்றி பிரதமர் Scott Morrison கூறுகையில், இன்று ஆஸ்திரேலியாவின் வரலாற்று தினம். மக்களுக்கு இந்த தடுப்பூசியின் மீது நம்பிக்கை ஏற்படவே, தாம் முதலில் செலுத்திக் கொண்டதாக கூறினார். Chief Nurse of Midwifery, முதன்மை சுகாதார அலுவலர் மற்றும் தடுப்பூசி போட உரிமை கொண்டவர்களுடன் தானும் செலுத்தி கொண்டதாக கூறினார். ஆஸ்திரேலியர்களுக்கு இது முக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில், ஆஸ்திரேலியா தனக்கென்று ஒரு பாதையை ஏற்படுத்தி உள்ளதாகவும், இந்த தடுப்பூசி திட்டம் அதை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும். அதற்காக மக்கள் தங்களின் ஆதரவை தந்து நாடு வெற்றி பாதையில் செல்ல உதவ வேண்டும் என்றார்.

health minister greg huntHealth Minister Greg Hunt கூறுகையில், மக்களிடையே தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட தலைவர்கள் முதலில் செலுத்த வேண்டும். இதில் யாருக்கும் எந்த சலுகையும் இல்லை. எதிர்கட்சி தலைவருக்கும், அதனுடைய 2 உறுப்பினர்கள் மற்றும் Greens leader Adam Bandt-க்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தடுப்பூசி திட்டம் Phase 1A மற்றும் 1B ஆக உள்ளது. Phase 1A தடுப்பூசி திட்டம் நாளை தொடங்க உள்ளது. அதில் 1.4 மில்லியன் Dose Pfizer தடுப்பூசி முன்களப்பணியாளர்கள்,ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்கள், வயதானவர்கள் மற்றும் அங்கு வசிப்போருக்கு வரும் வாரங்களில் செலுத்த உள்ளதாகவும், சுமார் 4,000 Pfizer Dose சிட்டினிக்கு வர உள்ளதாகவும் கூறினார். மேலும் 12,000 முன்களப்பணியாளர்களுக்கு அடுத்த 3 வாரத்தில் போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்த வாரம் இது Alice Springs, Albany, Altona மற்றும் இதர பகுதிகளில் 60,000 தடுப்பூசி ஆஸ்திரேலியாவில் போடப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

மார்ச் மாதத்தில் தொடங்க உள்ள Phase 1B க்கு அதிகளவில் AstraZeneca தடுப்பூசி போட உள்ளதாகவும், இது Defence Force personnel, police மற்றும் ஊனமுற்றோருக்கு செலுத்தப்படும் என்றார். தடுப்பூசி மையங்களாக Royal Prince Alfred, Westmead & Liverpool Hospital தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் நாளொன்றுக்கு 1100 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. Melbourne விமானநிலையத்தில் தடுப்பூசி மையம் அமைத்து, அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

first Pfizer corona vaccine given to Prime MinisterPfizer தடுப்பூசியின் அளவு ஒவ்வொரு வாரமும், 11,000 ஆக Phase 1A வை 8 முதல் 10 வாரங்களில் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. Queenslandல் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் ஊழியர்கள், எல்லையில் பணிபுரிபவர்கள்,முன்கள சுகாதார ஊழியர்களுக்கு மொபைல் டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் தடுப்பூசி போட அழைக்கப்படுவதாகவும், அதில் 100 பேருக்கு Gold Coast University மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மெசேஜ் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லை மூடலை இந்த தடுப்பூசி திட்டம் எதிர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக Chief Health Officer Dr Jeanette Young கூறினார்.
இந்த தடுப்பூசி திட்டத்திற்கு பல எதிர்ப்பாளர்கள் உள்ளனர். நேற்று நாட்டின் பல இடங்களில் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. எதிர்ப்பாளர்கள் Fawkner பூங்காவில் போராட்டம் நடத்தினர். இதை கலைக்க போலீசார் மிளகாய் பொடி தூவி கூட்டத்தை கலைத்தனர். மேலும் பல பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.