Breaking News

அனைத்து ஆஸ்திரேலியர்களும் தடுப்பூசியை தயங்காமல் போட்டுக்கொள்ள வேண்டும் -சுகாதார வல்லுனர்கள் வேண்டுகோள் !

Australians should be vaccinated

அனைத்து ஆஸ்திரேலியர்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார வல்லுநர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். முன்னுரிமை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில் 60,000 Pfizer தடுப்பூசி அடங்கும். விக்டோரியாவின் தொற்று நோய் கட்டுப்பாட்டின் தலைவர் Rhonda Stuart முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

All Australians should be vaccinatedஇது குறித்து அவர் கூறுகையில், இந்த Covid 19க்கு எதிரான வேலையில் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தான் மிகவும் பெருமைக்கொள்வதாகவும், முதலில் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்திய பின்னர் மக்களிடம் தொடங்குவதே எங்களின் நோக்கம் என்றார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விக்டோரியாவின் முதல் தொற்றை Professor Stuart’s குழு நடத்தியது. நாங்கள் முதல் நோயாளியை பார்த்து 14 மாதங்கள் ஆகிறது. இந்த அளவு முன்னேற்றத்திற்கு காரணம் தடுப்பூசி. இதனால் மக்களுக்கு மிகுந்த பாதுகாப்பு உடையது. இதை மக்கள் செலுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் சுகாதார மற்றும் எல்லை தடுப்பு ஊழியர்களுக்கும், வயதானவர்கள் அங்கு வசிப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கினர்.

Dandenong மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவை நிர்வகிக்கும் செவிலியர் Rachel Hogben இந்த Jab பெறுவதில் நிம்மதி அடைந்ததாகவும், மிகவும் உணர்ச்சி வசப்பட்டதாகவும் , ஆனால் நான் மிகவும் நிம்மதி அடைந்ததாகவும் , இது எங்களை முன்னோக்கி கொண்டு செல்லும் இனி நாங்கள் பயப்பட தேவையில்லை என்றும் ,இது ஒரு அற்புதமான நாள் என்றும் கூறினார்.

ஆனால் ஆஸ்திரேலியாவின் துணை தலைமை மருத்துவ அதிகாரி Michael Kidd கூறுகையில், 20% மக்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள தயங்குவதாக கூறினார். மேலும் மருத்துவர்கள் Jab மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதை நிரூபிக்க பல முயற்சிகள் மேற்கொண்டனர். மக்கள் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் கொரோனா வைரசை எதிர்கொள்ளவும், அதை நமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கும் நம்முடைய இந்த திட்டம் உதவும். அதனால் இன்று நம்முடைய வாழ்வில் இன்று ஒரு உண்மையான மைல்கல் என்றார்.

இரண்டு செவிலியர்கள் Antonio Garza & Keita Winks கூறும்பொழுது, இது வேகமானதாகவும், வலியில்லாமலும் உள்ளது. இது மற்ற தடுப்பூசி போலத்தான். தடுப்பூசிகள் மக்களின் உயிரை காக்கிறது.மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வேலையை குறைக்கிறது என்றார்.
இதுவரை 570 ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்ட பணியாளர்கள் தடுப்பூசி போட முன்வந்துள்ளதாகவும், இது வார இறுதிக்குள் 1000 ஆக உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்களப்பணியாளர்களில் போலீசும், கொரோனா தடுப்பூசியை செலுத்த NSWல் ஆரம்பித்தனர். இது 35000 Dose-ஆக அடுத்த 3 வாரத்தில் இருக்கும்.

Gayathry Vellangalloor Srinivasanமாநில முதல்வர் Gladys Berejiklian தடுப்பூசியின் நன்மைகள் குறித்து பேசினார். அக்டோபர் மாத இறுதிக்குள் NSW.ல் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமை பெறும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும், அப்போது தான் வெளிநாட்டு பயணம் கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி நாம் சிந்திக்க முடியும். Environmental Services Supervisor Gayathry Vellangalloor Srinivasan கூறுகையில், Pfizer தடுப்பூசியை எடுத்து கொண்டால் மட்டுமே நாம் பொது வாழ்விற்கு செல்ல முடியும் என்றார்.

Health Minister Greg கூறுகையில், Pfizer-ருக்கு மாற்றாக AstraZeneca தடுப்பூசியும் அடுத்த மாதத்திலிருந்து செலுத்தப்படும். அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். Pfizer மற்றும் AstraZeneca தடுப்பூசிகள் இரண்டும் தனித்தனியாக ஒரு மனிதனுக்கு 21 நாள் இடைவெளியில் போடப்படும் என்றார்.

leave a reply