Breaking News

பயணத் தடை நீக்கத்திற்கு பின்னர் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வந்த முதல் விமானம் : தவறான பரிசோதனையால் விமானத்தை தவற விட்ட நிருபரின் நேரடி ரிப்போர்ட்

The first flight from India to Australia after the lifting of the ban, Direct report of the reporter who missed the flight due to a malfunction

இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் மிக அதிகமாக இருந்த நிலையில் இந்தியாவிலிருந்து விமான சேவைக்கு ஆஸ்திரேலியா தடை விதித்திருந்தது. இந்நிலையில் துபாய் வழியாக மாற்று விமானம் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது, கடுமையான அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்து முழுமையாக எல்லைகளை மூடியது ஆஸ்திரேலிய அரசு. இந்நிலையில் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை மீட்கும் வகையில் விமானத்தை இயக்க தடையை நீக்கியது ஆஸ்திரேலிய அரசு. இந்தியாவிலிருந்து டார்வின் வரை இயக்கப்படும் இந்த முதல் விமானத்தில் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்ய காத்திருந்த செய்தியாளர் ஒருவர் தவறான பரிசோதனை முடிவுகளின் காரணமாக இந்த விமானத்தை தவற விட்டார். டெல்லியில் இருந்து கருணாவின் இரண்டாவது அலை தாக்கம் தொடர்பான பல்வேறு தகவல்களை பதிவு செய்து வந்த ABC செய்தி தளத்தின் தெற்காசிய செய்தியாளராக இருந்த James Oaten ஆஸ்திரேலியா திரும்ப இந்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். அதற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையில் அவர் சோதனை மேற்கொண்டபோது சரியான முறையில் பரிசோதனை முடிவுகள் தெரியாததால் இந்த விமானத்தில் அவர் பயணிக்க முடியாமல் போனது.

The first flight from India to Australia after the lifting of the ban, Direct report of the reporter who missed the flight due to a malfunction,தொற்று பாதித்தற்கான அறிகுறிகள் இருக்கும் அளவுக்கு அதற்கான தடங்கல் உடலில் இருந்ததாக சோதனை முடிவுகள் வந்ததாகவும், ஆனால் இதற்கு முன்னதாக இருந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டதாகவும் ஜேம்ஸ் கூறியுள்ளார். இரண்டாவது அலையின் பேரழிவை டெல்லியில் இருந்து பதிவு செய்தது மிகவும் மன அழுத்தமான சூழல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மனைவி கர்ப்பமாக உள்ளதாகவும் தாங்கள் ஒரு ஓட்டல் அறையில் தங்கியிருந்த நிலையில் வீடு திரும்ப காத்திருந்த எங்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்ததாகவும் ஜேம்ஸ் கூறியுள்ளார். ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 மாத கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்தியை தான் பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு முந்தைய வாரத்தில் ஐசியு வார்டில் சென்று பார்த்தபோது 33 வயதான பெண் ஒருவர் பத்து நாட்களுக்கு முன்பு பிரசவித்து இருந்தார். அவர் கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த நாள் அவர் உயிரிழந்தார் என்றும், இந்த நிலையில் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக முடிவு வந்த நிலையில் அந்த சூழ்நிலையை தன்னால் உள்வாங்க முடியாமல் தவித்ததாக ஜேம்ஸ் கூறியுள்ளார்.

The first flight from India to Australia after the lifting of the ban, Direct report of the reporter who missed the flight due to a malfunction.அதே நேரத்தில் இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்புவதற்காக காத்திருந்த நிலையில் அவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், பரிசோதனைகளையும் செய்து தயார் நிலையில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. பயணத்திற்காக பரிசோதனை செய்த நிலையில் பாசிட்டிவ் முடிவுகள் வந்ததால் விமான பயணிகள் பலரும் அச்சமுற்ற தாகவும் அதில் சிலருக்கு முடிவுகள் வருவதில் குழப்பம் இருந்ததாகவும் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான முடிவுகளில் குழப்பம் இருந்ததால் தனக்கு வந்ததைப் போல குறைவான வைரஸ் எண்ணிக்கைகள் இருக்கிறது என்ற முடிவே பலருக்கும் வந்திருந்தது. எனவே ஹோட்டலில் தனிமைப்படுத்துதலுக்கு செல்வதற்கு முன்பாகவே பலருக்கும் இரண்டாவது பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்தது.

இந்தியாவில் பல்வேறு பெரிய புகழ்பெற்ற சோதனை ஆய்வகங்கள் உள்ள நிலையில் இது போன்ற குழப்பமான, தவறான முடிவுகளை அளிக்கும் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று ஆஸ்திரேலிய தரப்பு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நெகட்டிவ் என முடிவுகள் வந்த பயணிகள் இரண்டாவது விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதேபோன்று தனக்கும் இரண்டாவது பரிசோதனை முடிவில் நெகட்டிவ் ரிசல்ட் வந்து இருப்பதாகவும் தற்போது தான் மன நிம்மதியுடன் ஆஸ்திரேலியா புறப்பட தயாராக இருப்பதாகவும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3tXIwq8