Breaking News

கியா கார்களின் இரண்டு மாடல்களில் பாதுகாப்பு கோளாறு : திரும்பப் பெறக் கோரும் ஆஸ்திரேலிய தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு

kia

கியா கார்களின் பிரபலமான இரண்டு மாடல்களில் எஞ்சின் குறைபாட்டை காரணம் காட்டி அவற்றை இயக்க விட்டாலும் தீ பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் குறிப்பிட்ட இரண்டு மாடல்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று ஆஸ்திரேலிய தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட 2 மாடல் கார்களிலும் இந்த பிரச்சனை காரணமாக 57 ஆயிரம் வாகனங்களை திரும்பப் பெறும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து குறிப்பிட்ட கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் நெருக்கமான இடங்களில் காரை நிறுத்துவதற்கு அச்சம் தெரிவித்து வருகின்றனர். மேலும் குறிப்பிட்டட்ட பிரச்சனை உள்ள கார்களை எப்படி கண்டறிவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

kia.Kia QL Sportage (2016-2021) Kia CK Stinger (2017-2019) ஆகிய கியாவின் 2 ரக கார்களில் தான் எஞ்சின் கோளாறு மற்றும் அதன் காரணமாக எஞ்சினை இயக்காமலேயே தீப்பிடிக்கும் பிரச்சனை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை உள்ள கார்கள் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் தொடங்கி அக்டோபர் 2020ஆம் ஆண்டு வரைக்கும் 57 ஆயிரத்து 851 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது ஆஸ்திரேலிய தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட 2 மாடல் கார்களிலும் திரும்பப் பெறுவதற்கான கார்களின் பிரத்யேக அடையாள எண் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. கியாவின் இணையதளத்தில் பிரத்யேக அடையாள எண்ணை குறிப்பிட்டு தங்களது வாகனம் பிரச்சனையில் உள்ளதா என்பதை உறுதி செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

kia stangerகுறிப்பிட்ட 2 மாடல் கார்களிலும் வண்டியை நிறுத்திய பின்பும் ஹைட்ராலிக் எலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்டில் தொடர்ந்து இயங்கு தன்மை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு எஞ்சின் பகுதி இயங்காமல் இருந்தாலும் தீ பிடிப்பதற்கான வாய்ப்பு உருவாவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வாகனம் தீப்பிடித்து காயமடைவது, உயிரிழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் உடனடியாக இரண்டு மாடல் கார்களையும் திரும்ப பெற வேண்டும் என்று ஆஸ்திரேலிய தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு துரிதப்படுத்தி உள்ளது.

தற்காலிகமாக கியா நிறுவனம் இன்ஜினில் ஏற்பட்டுள்ள அந்த கோளாறை இலவசமாக சரி செய்து தருவதாகவும் அதுவரை நெருக்கமான இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் உரிமையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அருகில் உள்ள டீலர் மற்றும் கியாவின் உடைய அதிகாரப்பூர்வ இணைய தளத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3ouxAPA