Breaking News

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார பாதிப்பு : 2060 -ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகளை பாதிக்கும் என அறிக்கை

Severe Economic Impact of Corona Outbreak. Reported to Affect Australian Government Operations by 2060

கொரொனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு நாட்டை மிகப்பெரிய அளவில் பற்றாக்குறையில் ஆழ்த்தி இருப்பதாக நிதி நிலை தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை, அரசின் பொக்கிஷங்களில் பாதிப்பு, புலம்பெயர்வோருக்கான தீர்வு என இவை சில 10 ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும் என்று மத்திய கருவூலத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இவை அனைத்தும் நீண்ட கால பாதிப்பை அரசுக்கு ஏற்படுத்தும் என்றும் அது 2060 ஆண்டு வரை பாதிப்பின் எதிரொலி நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் தொகை மற்றும் புலம் பெயர்வோர் விஷயங்களில் தேசிய அளவிலான தடை மற்றும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை அடுத்த சில பத்தாண்டுகளுக்கு நிச்சயம் நீடிக்கும் என்றும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

economic effort2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பேசிய மத்திய கருவூல அதிகாரி Josh Frydenberg, அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் 12 மாத கால தாமதத்துக்கு கொரோனா பெருந்தொற்று உள்ளாக்கி இருப்பதாக தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கும் அதே வேளையில், மிக அதிக வயது விகிதத்தில் ஆன மக்கள் தொகை அதிகரிக்கக்கூடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஓய்வு காலத்தில் பணியாற்றும் நபர்களின் எண்ணிக்கை சராசரியாக குறைந்து வருவதாகவும் இது கடந்த காலங்களில் கூடுதலாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்து வரும் நான்கு பத்தாண்டுகளில் மக்கள் தொகை விவகாரம் அரசுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்றும் இதை தேசிய அளவில் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுக்கு அறிக்கையின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. புலம் பெயர்வோர் மற்றும் உள்நாட்டு மக்கள் தொகை இரண்டும் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை வரும் நாட்களில் ஏற்படுத்தக்கூடும் என்றும் ஒரு சில எச்சரிக்கைகள் கூறப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் கொரோனா பெருந்பெற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளிலிருந்து மேலும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு காலதாமதம் ஆகும் என்று மத்திய கருவூல அதிகாரி Josh Frydenberg கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/35ZdR2a