Breaking News

ஆஸ்திரேலியாவில் கொரொனா இல்லாத நிலை எப்போது ? : தடுப்பூசி நடவடிக்கைகள் முடியும் வரை ஊரடங்கு தொடரும் என நிபுணர்கள் தகவல்

When is the absence of corona in Australia Experts inform that the curfew will continue until the end of vaccination activities.

நாடு முழுவதும் தற்போது நிலவும் சூழல் கத்திமுனையில் இருப்பது போன்ற நிலை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மூன்று பகுதிகளில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்றும் தடுப்பூசி முழுவதுமாக போடும்வரை ஊரடங்கு ஒன்றே வழி என்றும் அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பிட்ட மூன்று மாகாணங்களில் தீவிரமாக பரவும் டெல்டா வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோயியல் நிபுணர் Mary-Louise McLaws கூறியுள்ளார்.

அரசு மிக வேகமாகவும் தீவிரமாகவும் செயல்பட வேண்டிய சூழல் இது என்றும் டெல்டா வகை வைரஸுக்கு எதிரான போராட்டம் இன்னும் சில நாட்களில் அதிகரிக்கும் என்றும் Mary-Louise McLaws தெரிவித்துள்ளார்.

When is the absence of corona in Australia. Experts inform that the curfew will continue until the end of vaccination activitiesஇந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் தற்போது 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். Bondi Cluster மூலமாக 130 பேர் வரை நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் தடுப்பூசி நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், தடுப்பூசி பணிகளை முழுமை படுத்தினால் மட்டுமே முற்றுப்பெறவில்லை கட்டுப்படுத்த முடியும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். குறைவாக தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் பகுதிகளில் தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும், டெல்டா வகை வைரஸின் பரவும் தன்மை பல மடங்கு வேகமாக உள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3do3NDG