Breaking News

வாகன எரிவாயு விலை இரண்டு டாலருக்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளதை அடுத்து, ஆஸ்திரேலியாவின் தலைநகரப் பகுதிகளை விடவும், மாகாணங்களின் உள்ளூர் பகுதிகள் பல கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

Local areas of the provinces are being hit harder than the capital, Australia, as vehicle gas prices rise by more than two dollars.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நிலவி வரும் போர் சூழல் எரிவாயுக்களின் விலையை கடுமையாக அதிகரிக்கச் செய்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் விலை உயர்வினால் சிக்கி தவித்து வருகின்றனர். எண்ணெய்களுக்கான தேவை அதிகரித்துள்ளதை அடுத்து, ஒட்டுமொத்த வர்த்தகமும் திணறி வருகிறது.

Local areas of the provinces are being hit harder than the capital, Australia, as vehicle gas prices rise by more than two dollarsஆஸ்திரேலியாவில் தேர்தல் காரணமாக முந்தைய அரசு எரிவாயுக்களின் விலையை கட்டுக்குள் வைத்திருந்தது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் முதல் எரிவாயு லிட்டருக்கு 22 செண்ட்ஸ் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆஸ்திரேலியாவின் தலைநகரப் பகுதிகளில் எரிவாயு லிட்டர் விலை இரண்டு டாலருக்கும் அதிகமாகியுள்ளது.

 

குறிப்பிட்ட சில உள்ளூர் பகுதிகளில் மேலும் விலை அதிகரித்துவிட்டது. இதனால் போக்குவரத்து துறையில் கடும் விலை உயர்வு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து அத்தியாவசப் பொருட்கள் முதல் பல்வேறு பொருட்களின் விலையும் சராமாரியாக அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.