பிரிஸ்பேன் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் ஹியான் கபில். கடந்த சில நாட்களாக வயிற்றுவலி, வாந்தியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அருகில் உள்ள லோகன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சுமார் 4 மணி நேர சிகிச்சைக்கு பிறகு, ஹியான் கபிலை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி மருத்துவமனை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இரவு 10 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போதே சிறுவனுக்கு வயிற்றுவலியும் வாந்தியும் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வீடு திரும்பிய 2 மணி நேரத்தில் சிறுவன் சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக மீண்டும் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சிறுவன் சிறிது நேரத்தில் உயிரிழந்தது எப்படி என்று பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து குயின்ஸ்லாந்து மாகாண போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.