Breaking News

முடிந்தவரை பாராளுமன்ற வளாகத்தில் கலாச்சார மாற்றத்தை கொண்டு வர முயற்சிப்பேன்-ஸ்காட் மோரிசன்

I will try to bring about cultural change on the Parliament premises as much as possible-says Scott Morrison

ஆரம்பத்தில் ஆண்கள் எந்த ஒரு விஷயத்தையும் சரியாக புரிந்து கொள்வதில்லை என்றும், தன்னால் முடிந்தவரை பாராளுமன்ற வளாகத்தில் கலாச்சார மாற்றத்தை கொண்டு வர முயற்சிப்பேன் என்று Prime Minister Scott Morrison கூறினார்.

பெண்கள் துன்புறுத்தல் தொடர்பான செய்தியை News Corp தவறாக கையாண்டுள்ளது என்று தான் கூறியதற்கு மன்னிப்பு கேட்டார். பாராளுமன்றத்திற்கு வெளியேயும் பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு மரியாதை தரும் வண்ணம் மாற்றத்தை கொண்டு வருவது நமது அனைவரின் கடமையாகும். இது ஒரு சமூக சவால். அரசாங்கத்தால் மட்டுமே இதை தீர்க்க முடியாது. மக்கள் அனைவருக்கும் இதில் பங்கு உள்ளது. அனைவரும் ஒற்றுமையாக முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Minister for Superannuation Jane HumeMinister for Superannuation Jane Hume கூறுகையில், பிரதமர் இதைப்பற்றி அதிகமாக கூறிவிட்டார். அவர் தவறான செய்தியை பேசியதற்காக மன்னிப்பும் கேட்டார். இப்போதைய என்னுடைய கேள்வி, பெண்கள் எவ்வாறு முன்னேறி செல்வது என்பதே!

Liberal MP Katie Allen கூறுகையில், பிரதமர் கூறியது தவறு. பெண்கள் தங்கள் பணிபுரியும் இடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எவ்வாறு சரி செய்ய போகிறார்? இந்த நாடாளுமன்றம் அதற்கு என்ன தீர்வு வழங்க போகிறது? என்பதை தெரிந்து கொள்ள பெண்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இது குறித்து பிரதமர் கூறுகையில், இந்தாண்டு பல இன்னல்களை நமக்கு தந்துள்ளது. மக்கள் இதை புரிந்து கொள்வார்கள் என்றார்.