Breaking News

NSW-வில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்வு !

NSW-வில் திங்கள்கிழமை முதல் Covid-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வெளியில் செல்வதற்கு கட்டுப்பாடுகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது!

பெரும் தளர்வு ஏற்படுவதாக மாநில அரசு அறிவித்த பின்னர், 12 மாதங்களுக்குப் பின் முதல் முறையாக NSW-ல் Covid-19 கட்டுப்பாடுகள் இருக்காது என கூறப்பட்டது. மார்ச் 29 ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். மேலும் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் கட்டாயமாக இருக்காது.

திங்கட்கிழமை முதல் திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பங்கு பெறும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும், வெளியில் நடமாடுவதற்கு எந்தத் தடைகளும் இல்லை, வெளிப்புற பொது கூட்டங்களில் சுமார் 200 பேர் அனுமதிக்கப்படுவர், பொழுதுபோக்கு அரங்குகளான தியேட்டர்களில் மக்கள் 100 சதவீத இருக்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் பொது போக்குவரத்தில் முகக்கவசம் பயன்பாடு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது .

இது குறித்து, Gladys Beregiklian கூறுகையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைரஸ் பரவுவது ஏற்படும் போது அங்குள்ள அனைவரையும் அடையாளம் காண முடியாத பட்சத்தில் நாம் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் அதைப் பார்க்க நான் விரும்பவில்லை எனவும் நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம் எனவும் கூறினார்.

Covid-19 restrictions relaxations in the NSW 1Covid-19 கடந்த இரண்டு மாதங்களில் சமூக பரிமாற்றத்தின் கீழ் 2 கொரோனா வழக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. மேலும் இவை இரண்டும் மாநிலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தனிமைபடுத்தப்பட்ட ஹோட்டல்களில் பணிபுரியும் அனைத்து மக்களுக்கு குறைந்தது ஒரு தொற்று கிடைத்ததாகவும், பலர் Pfiser தடுப்பூசியின் இரண்டாவது Shot- ஐ பெறுகிறார்கள் எனவும், மேலும் இது ஒரு சிறப்பான செய்தி எனவும் கூறினார்.

NSW-ல் Covid-19 சமூக பரவல் இல்லை என்பதால் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுகின்றன என்று தலைமை மருத்துவ அதிகாரி Kerry Chant கூறினார். மேலும் ஒரு நபருடன் 1.5 மீட்டருக்குள் கூட்டமாக செல்ல வேண்டாம் ஆனால் குடும்பத்தினருடன் செல்லும் போது இது தேவை இல்லை. நேற்று முதல் இரவு 8 மணி வரை NSW -ல் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.