Breaking News

சிட்னி வெள்ளத்தில் காரில் சிக்கிய 25 வயது நபர் மரணம் !

சிட்டினியின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சிக்கிய காரில் இருந்த 25 வயது நபர் இறந்து விட்டார்.
இந்த விபத்து பற்றி அவசர சேவை கூறுகையில், இந்த நபர் வெள்ளநீரில் சிக்கிக் கொண்டபோது அவர் triple-0 வை தொடர்பு கொண்டார். triple-0 Operator தொடர்ந்து அந்த நபருடன் தொடர்பில் இருக்க போராடினார்.  ஆனால் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

Police Detective Inspector Chris LairdPolice Detective Inspector Chris Laird கூறுகையில், அவசர சேவை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அந்த இடத்திற்கு விரைந்து சென்றபோதிலும், அந்த காரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு சோகமான விபத்து. அவருடைய உடல் மதியம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள இவருடைய நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளோம். அவர்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவரைப் பற்றிய தகவல்களை தங்களால் தர இயலாது. மேலும் எங்களுடைய விசாரணையில் சாலைகள் மூடியிருந்தன. அதை தடுக்கும் gate-கள் 10மீ நீருக்கு அடியில் சென்றிருந்தது என்றார்.

Emergency Services Minister David ElliottEmergency Services Minister David Elliott கூறியபோது, இன்று பிற்பகல் சிட்டினியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒரு நபர் இறந்தார் என்பதை அறிந்து கவலையுற்றேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இதைப்போன்று துயரமான சம்பவங்கள் ஏற்படும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதைப் போன்ற கடுமையான சூழ்நிலையில் மக்களை பாதுகாக்க போராடும் போலீஸ் மற்றும் அவசர சேவை ஊழியர்களுக்கு தன்னுடைய நன்றியையும் கூறினார்.

இதற்கிடையில் தொடர்ந்து பெய்யும் மழையினால் பல ஆறுகளின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் Ulmarraவில் உள்ள Clarence ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அதை சுற்றியுள்ள தாழ்வான இடங்களில் உள்ளவர்கள் அங்கிருந்து செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

A 25-year-old man has died after being trapped in a car in Sydney floods 1Tabulam town, Hunter River, Windsor, Sackville, Lower Portland, Wisemans Ferry போன்ற பகுதிகளில் வெள்ளம் அதிகமாக இருப்பதாக அங்கிருந்து வெளியேறுமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. NSW Premier Gladys Berejiklian கூறுகையில், மக்களை விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இன்று நாம் ஆறுகளின் வெள்ளப்பெருக்கை நாம் கவனிக்க வேண்டும். குறிப்பாக Moree, Northern Rivers, Upper Hunter, Central Coast, Hawkesbury-Nepean போன்ற பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும்.

Bomன் Dean Narramore மழை அதிகமாக உள்ளதால் ஆபத்து அதிகம் உள்ளது. இன்னும் நிலைமை மோசமாக இருக்கும். குறிப்பாக NSW வின் வடகிழக்கு பகுதியில் வெள்ளம் அதிகமாக இருக்கும். மேலும் வெள்ளம் காரணமாக 160 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக சாலைகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிட ஓரிரு நாள் ஆகும். மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல படகு மற்றும் ஹெலிகாப்டர்களை அதிகாரிகள் பயன்படுத்தினர் என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார்.