Breaking News

ஆஸ்திரேலியாவில் பிற நாடுகளுக்கான பயணத்தின் தடை நீட்டிப்பு !

மத்திய அரசு ஆஸ்திரேலியாவின் அவசர பயணங்களின் தடையை மேலும் நீட்டித்துள்ளது. மார்ச் 17ம் தேதியுடன் முடிவடையும் அவசர உத்தரவை ,அரசு மேலும் 17 ஜூன் 2021 வரை நீட்டித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று சுகாதார அமைச்சர் Greg Hunt கூறுகையில், மனித உயிர் அவசரகாலம் கூடுதலாக மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் என தெரிவித்தார். பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் ஜூன் 17ஆம் தேதி தடை முடிந்தால் குறைந்தது 15 மாதங்களுக்கு வெளிநாட்டு பயணங்கள் இல்லாமல் இருப்பார்கள்.

Greg Huntஅவசர கால நீட்டிப்பிற்கு வெளிநாட்டிலிருந்து வரும் அபாயங்கள் தான் காரணம் என Greg Hunt கூறினார். இன்னும் மூன்று மாதங்களுக்கு அவசர காலத்தை நீட்டிப்பது என்பது அனைத்து மக்களின் ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் மற்றும் ஆபத்தை குறைப்பதாகும். ஒரு குறிப்பிட்ட அடிப்படையிலேயே அதிகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.மேலும் அதன் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படலாம் அல்லது முழுமையாக ரத்து செய்யப்படலாம், எனக் கூறினார்.

பிற நாடுகளிலிருந்து புறப்படுவதற்கு முன்பு முந்தைய சோதனை மற்றும் விமானங்களில் முகக்கவசம் அணிவதை வழக்கம்போல் செயல்படுத்தப்படும். மேலும் Cruise கப்பல்களுக்கு ஆஸ்திரேலியாவில் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.ஆஸ்திரேலியாவில் வரும் காலங்களில் கப்பல் தொழில்கள் மீண்டும் தொடங்குவதற்கு அரசு ஆர்வத்தை காட்டியுள்ளது.இந்த மாதிரியான அதிகாரங்களை ஆஸ்திரேலிய அரசு பயன்படுத்துவது இது முதல்முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.