Breaking News

ஊனமுற்றோர் பகுதியில் நிறுத்தப்பட்ட McLaren கார்..கடுப்பான பொது மக்கள் !

McLaren car parked in disabled area

$300,000 மதிப்புள்ள நீலநிற McLaren 570GT கார் ஒன்று Chapel தெருவில் உள்ள Como Centre-ன் underground கார்பார்க்கில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த காரின் ஓட்டுனர் மெல்பர்னின் நிறுத்தக்கூடாத இடத்தில் அனுமதி இல்லாமல் நிறுத்தியிருந்தார். இதனால் அது பெரும் சர்ச்சைக்குள்ளானது.இந்த குற்றம் சாட்டப்பட்ட காரின் புகைப்படத்தை ஒருவர் பேஸ்புக்கில் வெளியிட்டார்.

மாலை 5.30 மணி வரை அந்த கார் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. அந்த Car Parking-ன் மேலாளர் அந்த காருடைய உரிமையாளரை கண்டுபிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. அந்த காரை வேறொரு வாகனத்தின் உதவியால் இழுக்க நேர்ந்தது.

McLaren car parked in disabled area 1திமிருடன் அந்த நபர் Disability Spotல் காரை நிறுத்தியதுடன், அந்த பாதையில் வரும் மற்ற கார்களில் ஊனமுற்றோர் Wheel Chair-ருடன் காரில் ஏற முடியாதபடி மிக நெருக்கமாக நிறுத்தியிருந்தார்.

இது நம்ப முடியாதது. யாரோ ஒருவர் Windscreen ல் குறிப்பு ஒன்றை விட்டுச் சென்றுள்ளதால் இங்கு அவர் சிறிதுநேரம் இருந்திருக்கலாம். இந்த McLaren கார் ஒரு BMW Suvவிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.