Breaking News

தடுப்பூசி போடாதவர்களும் சுதந்திரமாக இருக்கலாம்…!

நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் போடாதவர்களுக்கான வழிமுறை வகுக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பான விரிவான தகவல்களை பார்க்கலாம்.

Even those who are not vaccinated can be freeடெல்டா வகை கொரோனா பரவலின் போது நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல்வேறு மாதங்களுக்கு பிறகு பல கட்டுப்பாடுகளை தளர்த்தி மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அனைத்து இடங்களுக்கும் செல்லலாம். சமூக இடைவெளி சாத்தியமில்லாத இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம். அழகு நிலையங்கள் இயங்குவதற்கு அனுமதி. ஆயிரம் மக்களுக்குள் கூடும் நிகழ்வுகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் அவசியமில்லை. பயணம் செய்வதற்கு அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Even those who are not vaccinated can be free,மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்திருந்தால், அவர்கள் பிசிஆர் சோதனை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும் என கூறப்பட்டுள்ளது. இதனுடன் பயணங்களின் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மருத்துவமனைகள், பப்புகள், பார்கள், கிளப்புகள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் கியூ.ஆர் ஸ்கேன் செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.

பொழுதுப்போக்கு நிகழ்ச்சிக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழை கொண்டு வரவேண்டும். சர்வதேசளவில் பயணம் மேற்கொள்பவர்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்கவேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடு விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3GRyuxv