19 வயதுக்குட்பட்டோர் விளையாடும் உலகக் கோப்பை கிரிகெட் போட்டியில் தமிழ்நாட்டில் பிறந்த நிவேதன் ராதாகிருஷ்ணன் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார்.
வரும் ஜனவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகின்றன. இந்த போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதில் தமிழகத்தின் சென்னையில் பிறந்தவரான நிவேதன் ராதாகிருஷ்ணன் இடம்பிடித்துள்ளார். இடது கை ஆட்டக்காரரான இவர், முன்வரிசை பேட்ஸ்மேனாக உள்ளார். மேலும் இவர் ஆஃப்-ஸ்பின் மற்றும் இடது கை ஸ்பின் பவுலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013-ம் ஆண்டு நிவேதனின் குடும்பம் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளது. முன்னதாக தமிழ்நாடு கிரிக்கெட் அசோஷியனுக்கான ஸ்வாராஜ் சிசி போட்டியிலும், இரண்டு தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டிகளிலும் நிவேதன் ராதாகிருஷ்ணன் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.