Breaking News

ஊரடங்கின் எதிரொலி -விக்டோரியா வரும் சர்வதேச விமானங்கள் நிறுத்தம் !

Victorian Premier Daniel Andrews hd

கொரோனா தொற்று காரணமாக விக்டோரியாவிற்கு வரும் சர்வதேச விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஐந்து நாள் ஊரடங்கு மேற்கொள்ள மாநிலமுதல்வர் டேனியஸ் ஆன்ட்ரூஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பிரதமர் Scott Morison விமானங்களை நிறுத்த அனுமதியளித்தார். இது உடனடியாக செயல்படுத்த முடியாது. ஏனெனில் விமான சேவை செயல்பாட்டில் கொண்டிருக்கிறது. இன்னும் 5 விமானங்கள் உள்ளன. அவற்றில் குறைந்தபட்சம் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்கலாம்.பறந்து கொண்டு இருக்கும் விமானத்தின் சேவையை உடனடியாக நிறுத்தமுடியாது என்று கூறினார்.

Effect of lockdown - International flights to Victoria haltedவிக்டோரியாவிற்கு வரும் வார மக்களின் எண்ணிக்கை 1210 முதல் 1310 வருகையை உயர்த்துவதற்காக அமைக்கப்பட்டிருந்தது. தற்போது ரத்து செய்யப்படும் விமானங்கள் மற்றும் அதிக டிக்கெட் விலை போன்ற காரணங்களால் ஆஸ்திரேலியர்கள் வருவது கடினமாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எவ்வளவு மக்கள் வருகிறார்கள் என்பதை மத்திய அரசு தான் கூற வேண்டும்.

மெல்போர்ன் விமானநிலைய Holiday Inn-னுடன் தொடர்புடைய 14 தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Holiday inn தொற்று மூலமாக முதன்மை தொற்று 996 ஆக உள்ளது.

மேலும் மெல்போர்ன் விமானநிலையத்தில் உள்ள தொற்று ஏற்படும் இடமான Brunetti’s cafe-யில் வேலை செய்யும் 12 ஊழியர்களில் 11 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. விமானநிலையத்திற்கு சென்று வந்த 2000 பேரும் தங்களை தனிமைப்படுத்தவும்,சோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர் .

மேலும் அவர் விக்டோரியர்களின் தைரியத்தையும், இரக்கத்தையும் பாராட்டினார். மற்றொரு ஊரடங்கை எதிர்கொள்ள இருக்கிறோம். இதனால் வணிகத்தில் இழப்பு ஏற்படலாம். இந்த இழப்பு எளிதானதல்ல என்பது எனக்கு தெரியும் என்றார்.

ஆஸ்திரேலியாவின் Chief Medical Officer Paul Kelly கூறும்பொழுது, இப்பொழுது விக்டோரியாவில் ஏற்பட்ட புதிய தொற்றுகள் அனைத்தும், ஏற்கனவே ஏற்பட்ட தொற்றுகளின் தொடர்பு ஆகும். Tullamarine தொற்று மிகவும் கவலையாக உள்ளது. நிறைய மக்கள் அந்த இடத்தை கடந்து சென்றிருப்பார்கள். அனைத்த மாநிலங்களும், விக்டோரியா செய்வதை போல தொடர்பில் உள்ளவர்களை கண்டறிய வேண்டும். மேலும் அவர் விக்டோரியாவின் தனிமைப்படுத்தல் மீது நம்பிக்கை உள்ளது என்றார்.

தலைமை சுகாதார அதிகாரி Brett Sutton கூறுகையில், நீட்டிக்கப்படும் ஊரடங்கு குறித்து கவலை தெரிவித்தார். விக்டோரியாவிற்கு காரணமில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். Tasmania, Northern Territory, Queensland, Western Australia & South Australia விக்டோரியர்களுக்கு தனது எல்லையை மூடியுள்ளது என்று கூறினார்.