Breaking News

கொரோனா மூன்றாவது அலையை தடுக்க விக்டோரியா முழுவதும் ஊரடங்கு !

Lockdown across entire Victoria to prevent third wave of corona

Holiday inn ஹோட்டலில் ஏற்பட்ட தொற்று எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளதால் விக்டோரியாவிற்கு முழுவதும் ஐந்து நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சில விதிகளுடன் பள்ளிகள் மற்றும் அத்தியாவசிய சில்லறைக் கடைகள் மூடப்படும், மேலும் மெல்போன் ஆகஸ்ட் மாதம் ஊரடங்கு எந்த முறையில் இருந்ததோ அதே முறையில் இருக்கும் . 5 கிலோ மீட்டர் விதி மீண்டும் அமல்படுத்தப்படுகிறது,மக்கள் ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்கக் கூடாது.

மத கூட்டங்கள் மற்றும் சேவைகள் அனுமதிக்கப்படாது, மேலும் இறுதிச் சடங்குகளுக்கு 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர், மேலும் திருமணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மாறுபட்டை உடைய “Hyper Infectivity” என்பது வைரஸ் மிக வேகமாக பரவகூடிய ஒன்று ,இது விக்டோரியாவிற்கு மிகப்பெரிய ஆபத்தை அளித்தது, மிகவும் வித்தியாசமானது மேலும் 2020இல் ஏற்பட்ட வைரஸ் இல்லை. இது கடந்த 12 மாதங்களில் இந்த நாட்டில் யாரும் காணாத வேகத்தில் பரவுகிறது, என்று மாநில முதல்வர் Daniel Andrews கூறினார்.

இது குறித்து சுகாதார அமைச்சர் Martin Foley கூறுகையில் ,மிகவும் பேரழிவைத் தரும் மூன்றாவது அலையை தடுக்க ஊரடங்கு தேவை என கூறினார். உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் நெருங்கிய தொடர்புகளாக 905 விக்டோரியர்களை அடையாளம் கண்டுள்ளனர்.முன்னதாக மோரிசன் குறுகிய நேர்த்தியான ஊரடங்கிற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். வியாழக்கிழமை சுகாதார துறையால் மொத்தம் ஐந்து புதிய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,இதில் இரண்டு இரவு 11 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

மெல்போர்ன் விமான நிலையத்தில் உள்ள டெர்மினல் 4-ல் உள்ள Brunette cafe-ல் பிப்ரவரி 9ஆம் தேதி அதிகாலை 4:45 மணி முதல் 1:15 மணி வரை பாதிக்கப்பட்ட நபரால் பார்வையிட்ட பின்னர் வெள்ளிக்கிழமை காலை ஒரு வெளிப்பாட்டு தளமாக அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஹோட்டலுக்கு வந்த அனைவரும் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியா வியாழக்கிழமை நள்ளிரவில் விக்டோரியாவின் தலைநகரில் இருந்து பயணிகளை தடுத்தது, மேலும் அதே நேரத்தில் குயின்ஸ்லாந்து சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நகரின் வழிபாட்டுத் தளங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது . மேற்கு ஆஸ்திரேலியாவும் விக்டோரியாவிற்காக தனது எல்லையை குறைந்தது 7 நாட்களுக்கு மூடப்போவதாக அறிவித்துள்ளது.