Breaking News

கொரோனா பாதிப்பு எதிரொலி : விக்டோரியாவில் வெளிநாட்டு விமானங்கள் தற்காலிகமாக ரத்து !

corona virus international flights temporarily cancelled Victoria

விக்டோரியாவில் Gold Standard ஹோட்டல் மூலமாக பிப்ரவரி 12ல் ஏற்பட்ட Covid 19 தொற்று காரணமாக வெளிநாட்டு விமானங்களை தற்காலிகமாக மாநில அரசு நிறுத்தி வைத்தது. விக்டோரியாவின் தற்காலிகமாக ஹோட்டல் தனிமைப்படுத்தும் திட்டம், பயனாளிகள் திரும்பி வராததால் அதை பராமரிக்க நாளொன்றுக்கு $1 மில்லியன் செலவாகுவதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விக்டோரியா அரசு தனது 2020 & 21 ஆண்டின் நிதி அறிக்கையை அறிவித்தது. அதில் இத்திட்டத்தை இயக்க ஒரு வருடத்திற்கு $377 மில்லியன் செலவாகும் என கூறியுள்ளது.

international flights temporarily cancelled ictoriaஇத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டாலும், ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத்காரர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. எதிர்கட்சியின் அழுத்தங்களுக்கு மத்தியில், ஹோட்டல் தனிமைப்படுத்தும் திட்டம் மீண்டும் எப்போது தொடங்கும் என்பதற்கான எந்த ஒரு அறிவிப்பையும் அரசு அறிவிக்கவில்லை.வைரஸ் பரவுவதை தடுக்க Avalon மற்றும் மெல்பர்ன் விமான நிலையங்களில் வெளிப்புற தனிமைப்படுத்தல் அமைப்பதை பற்றி பரிசீலணை செய்ய ஒரு ஆய்வு நடந்து வருகிறது.

விக்டோரியாவின் Attorney-General Jaclyn Symes கூறுகையில், வரும் வாரங்களில் ஹோட்டல் தனிமைப்படுத்தலைப் பற்றி கருத்துகளை அரசு தெரிவிக்க உள்ளது. கருத்துக்களை சுகாதாரத்துறை அமைச்சர் Danny Pearson கூறுவார். மக்கள் பாதுகாப்பாக தங்களுடைய வீட்டிற்கு வருவதையே நாங்கள் விரும்புகிறோம். அதற்கு சரியான வழி ஹோட்டல் தனிமைப்படுத்தும் திட்டம் ஒன்றே. அத்திட்டத்தின் மறுதொடக்கம் பற்றி விரைவில் அறிவிப்பு வரும் என்றார்.