Breaking News

NSW மத்திய வட கடற்கரை பகுதியில் பஸ் தீ பிடித்து எரிந்து நாசம்..பெண்ணுக்கு வலை வீசும் போலீசார் !

என்.எஸ்.டபிள்யூ மிட் நார்த் கோஸ்ட்டில் திடீரென்று ஒரு பஸ் நாடு ரோட்டில் தீ பிடித்து எரிந்தது .அந்த பஸ்சில் இருந்த 9 பயணிகள் மற்றும் ஒரு ட்ரைவரை கட்டாயமாக வெளியேற்றிய பெண்ணின் செயல் சந்தேகதை தூண்டியதை தொடர்ந்தது அவர் தான் இந்த தீ விபத்துக்கு காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும் அந்த பெண்ணை வலை வீசி தேடி வருகின்றனர்.

bus fire in NSW Mid North Coast and Police searching for the suspectவியாழக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் பஸ் தீ விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து,தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ,பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.ஒரு பயணி தான் பஸ் தீப்பிடித்ததை முதன்முதலில் கவனித்ததாகவும் ,பஸ் ட்ரைவருக்கு அவர் தகவல் கூறிய சில மணி நேரங்களிலேயே தீ மலமலவென பரவியதாகவும் அதனால் உடனடியாக பஸ்சில் இருந்த அனைவரும் இறக்கிவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து உள்ளது .

இந்த விபத்து தொடர்பாக தலைமை போலீஸ் அதிகாரி கூறுகையில் பஸ் முழுவதும் தீக்கு இறையாகிவிட்டது என்றும் , யாரும் காயமடையவில்லை,உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறினார்.தீ ஏற்பட்டதனால் சில மின்இணைப்புகள் நாசமானதாகவும் அதனால் சுற்றியுள்ள தெருக்களுக்கு சிலமணிநேரங்களுக்கு மின்சாரம் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர் .இந்த விபத்து குறித்து சந்தேகமடையும் 20 வைத்து நபரை போலீசார் தேடிவருகின்றனர்.மேலும் இது தொடர்பான விசாரணை நடந்து கொண்டு இருக்கின்றது.