Breaking News

விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 120 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.

தளர்வுகளை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை கடும் சவாலை சந்தித்து வருகிறது.

விக்டோரியாவில் நேற்று மட்டும் 120 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், நடைபெற்றது.

அதில் ஊரடங்கு தளர்வுகளை அறிவிப்பது குறித்தும், 12 வயதுக்கு மேற்றப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு விக்டோரியாவில் பதிவான அதிகபட்ச தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளதால் , தளர்வுகளை அறிவிப்பதில் அரசு கூடுதல் கவனத்துடன் உள்ளது.

Corona infection has been confirmed in 120 people in the last 24 hours in Victoriaவிக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,501 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 33,455 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விக்டோரியா மாகாண முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ், ஊரடங்கு தளர்வுகள் மற்றும் நீட்டிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இன்று அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

தொற்று பரவலை கட்டுப்படுத்துவது மட்டுமே தற்போதைய நோக்கம் என்றும், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துக்கார்.

மேலும், விக்டோரியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களின் விவரங்களை , தங்களுக்கும் தெரிய படுத்த வேண்டும் என்றும், முறையான தகவல் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Link Source: https://ab.co/3t8bnZM