Breaking News

பிலிப்பைன்ஸில் 90 % மாவட்டங்களில் டெல்டா வைரஸ் பரவியுள்ளதால், தேவாலையங்களும் அவசர சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

As the delta virus has spread to 90% of the districts in the Philippines, churches are also being converted into emergency care center.

பிலிப்பைன்ஸில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 16,900 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

பிலிப்பைன்ஸ் தீவில் உள்ளா 17 மாவட்டங்களில் ,16 ல் டெல்டா வகை வைரஸ் பரவியுள்ளது.இதனால் தொற்று
எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

As the delta virus has spread to 90% of the districts in the Philippines, churches are also being converted into emergency care centerதொற்று பாதிப்பு அதிகரிப்பால் ஏராளமான நோயாளிகள் மருத்துவனைக்கு வருவதால் கடுமையான படுக்கை பற்றாக்குறையும் நிலவுகிறது. இதனால் மனிலாவில் உள்ள குயிசோன் நகர மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள தேவாலயங்கள், மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. தேவாலயங்களில் போடப்பட்டுள்ள படுக்கைகளில் இணைக்கப்பட்டுள்ள வெண்டிலேட்டர் கருவிகளில் உயிர்காக்கும் ஆக்சிஜன் வசதியுடன் ஏராளமான மக்கள், தங்கள் கொரோனாவுடனான யுத்தத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குயிசோன் நகர மருத்துவமனையின் இயக்குனர் ஜோஸ்பைன் சுபாந்தோ, சுகாதார கட்டமைப்பு கடும் நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்படுள்ளனர்.

As the delta virus has spread to 90% of the districts in the Philippines, churches are also being converted into emergency care center..மனிலாவை சுற்றியுள்ள மருத்துவமனை படுக்கைகள் தொற்றாளர்களின் வருகையால் நிரம்பி வருவதாகவும், படுக்கைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது தொற்று பரவலின் விகிதம் 20% வரை அதிகரித்துள்ளது. இதுவரை 33,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கேற்றுள்ள முன்கள பணியாளர்களான செவிலியர்களுக்கு அரசு அறிவித்த $ 139 ஊக்கத்தொகையை வழங்க அரசு தாமதித்து வருவதாகவும், இதனால் உடனடியாக ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்றும் செவிலியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, செவிலியர்களுக்கு வழங்கும் ஊதியம் பிலிப்பைன்ஸில் மிகக்குறைந்த அளவிலேயே வழங்கப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

As the delta virus has spread to 90% of the districts in the Philippines, churches are also being converted into emergency care center.,மேலும் செவிலியர்கள் மற்ற நாடுகளுக்கு பணிக்கு செல்வதை தவிர்க்க, கடந்தாண்டு பிலிப்பைன்ஸ் அரசு தடைவிதித்தது. தற்போது அந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டாலும், சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. முன்கள பணியாளர்களுக்கான நிலுவைத்தொகையை வழங்க அதிபர் Rodrigo Duterte உத்தரவிட்டாலும், இன்னும் அத்தொகை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்

பிலிப்பைன்ஸில் தற்போது வரை சுமார் 15% பேருக்கும் அதாவது 32 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 70% மக்கள் தொகையினருக்கு தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

Link Source: https://ab.co/3gUbaVn