Breaking News

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் சாலை சரிந்து விழுந்து விபத்து : இரண்டு பேர் பலி – 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Two died, more than 10 injured in road accident in Mississippi

மிசிசிபி மாகாணத்தில் Hurricane Ida பகுதியில் பெய்து இருந்த கனமழை காரணமாக சாலைகள் அதிக அளவில் பாதிக்கப் பட்டிருந்தன. இந்நிலையில் அப்பகுதியில் சாலை ஒன்று வாகனப் போக்குவரத்து மிகுந்த நேரத்தில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஏராளமான வாகனங்கள் சிக்கிக் கொண்டன. 15 முதல் 18 மீட்டர் பரப்பளவில், 6 முதல் 9 மீட்டர் ஆழத்திற்கு சாலை சரிந்தது.

Two died, more than 10 injured in road accident in Mississippi...இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனம் உட்பட 7 வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. பள்ளத்தில் சிக்கிக் கொண்ட கார்களை மீட்பதற்காக கிரேன்கள் வரவழைக்கப்பட்டது. மேற்கு Lucedale, Highway 26 பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் விபத்து தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். விபத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள் இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

Two died, more than 10 injured in road accident in Mississippi.விபத்து குறித்த முன்கூட்டிய விசாரணையில் இருப்பதால் விபத்து தொடர்பான போதிய விவரங்கள் எதுவும் இல்லை என்றும், அடுத்த அறிவிப்பு வரும்வரை Highway 26 மூடப்படுவதாகவும் நெடுஞ்சாலைத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். Hurricane Ida பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக கடுமையான புயல் மழை பெய்து வரும் நிலையில், 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. Hurricane பகுதியில் நான்காவது வகை புயல் வீசிய நிலையில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், முக்கியச் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

New Orleans, Louisiana, மிசிசிப்பி உள்ளிட்ட பகுதிகளில் கடும் சூறாவளி புயல் மழை காரணமாக சாலைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் கடுமையாக சேதம் அடைந்து இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Link Source: https://ab.co/3BBYiv8