Breaking News

ஆஸ்திரேலியா பொது பட்ஜெட் 2022 : நிதி ஒதுக்கீடு வரிவிதிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் தொடர்பாக ஏராளமான புள்ளிவிவரங்களை பாராளுமன்றத்தில் பதிவு செய்த Treasurer Josh Frydenberg

தேர்தலுக்கு முந்தைய வரவு செலவு கணக்கு தாக்கல் என்பது ஆஸ்திரேலியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பட்ஜெட்டுக்கு முன்னதாக உரையில் கோவிட், பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, ஊதிய உயர்வு, நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி பொருளாளர்
Josh Frydenberg பேசியிருந்தார்.

இந்நிலையில் பட்ஜெட் உரையை குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொருளாளர் Josh Frydenberg நிதி ஒதுக்கீடு மற்றும் வரி விதிப்பு போன்ற விவகாரங்களுக்கான காரணங்களை பல்வேறு புள்ளி விவரங்களோடு எடுத்துரைத்தார். இது தேர்தலுக்கான காரணங்கள் அல்ல என்றும், எதிர்க்கட்சிகள் தேர்தலை மையமாக கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையை பார்க்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Australia's General Budget 2022. Treasurer Josh Frydenberg records a number of figures in Parliament on announcements, including the allocation of taxation...முதியோர் பராமரிப்புத்துறை தொடர்பாக அரசு Royal Commission விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் செயல்படுத்தும் முயற்சியில், 17.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிதி திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து முதியோர் பராமரிப்புத்துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிய திட்டமிடுவோருக்கு 15 ஆயிரம் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி இடங்களுக்கென 49.5 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படுகிறது.

முதியோர் பராமரிப்புத்துறை ஊழியர்களுக்கு சுமார் 800 டாலர்கள் வரையிலான ஊக்கத்தொகை இரு கட்டங்களாக வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 400 டொலர்களும் இரண்டாம் கட்டமாக 400 டாலர்களும் வழங்கப்படவுள்ளது.

Australia's General Budget 2022. Treasurer Josh Frydenberg records a number of figures in Parliament on announcements, including the allocation of taxationஇந்த இரண்டு ஆண்டு காலமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்த துறைகள் அனைத்தும் கருத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டதாகவும் அதன் அடிப்படையில் எரிபொருள் விலை குறைப்பு பெண்கள் அதற்கான நிதி கூடுதலாக ஒதுக்கீடு முதியோர் பராமரிப்பு, பாதுகாப்பு துறைக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, அகதிகள் மறுவாழ்வு உள்ளிட்ட விவகாரங்கள் அதிக அளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொருளாளர் Josh Frydenberg தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 13 பில்லியன் டாலர் என்ற தொகை அப்படியே இரட்டிப்பாக 26 பில்லியனாக ஒதுக்கீடு செய்யப் படுவதாகவும், இந்த ஆண்டில் 15 பில்லியன் டாலர் தொகை மட்டுமே அதிகமாக செலவழிக்க பட்டிருப்பதாகவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Australia's General Budget 2022. Treasurer Josh Frydenberg records a number of figures in Parliament on announcements, including the allocation of taxation..பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் தடுக்கவும், இணையவழி குற்றங்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்தவும் 1.3 பில்லியன் டாலர் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் பொருளாளர் அறிவித்துள்ளார். மருத்துவ துறை கட்டுமான துறை உள்ளிட்ட துறைகளில் ஏற்படும் அதிக செலவினங்களை தவிர்க்கும் பொருட்டு நிதி ஒழுங்குமுறை செய்யப்படும் என்றும் அதன் காரணமாக உயர் சிகிச்சைகள் கிடைக்க வழிவகை செய்யவும், முதல் வீடு கட்டும் நபர்களுக்கான உத்தரவாதத்தை வழங்க முடியும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/385l70w