Breaking News

ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு உற்பத்தி கடந்தாண்டை விட 3.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்திலிருந்து தேசிய கணக்கு சார்ந்த தரவுகளை ஆய்வு செய்யும் குழு தெரிவித்துள்ளது.

Australia's GDP grew 3.3 percent year-on-year, according to a report by the Australian Bureau of Statistics on National Accounting.

இதுதொடர்பாக அக்குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு உள்நாட்டு உற்பத்தியின் பெருக்கம் மற்றும் அதுசார்ந்த வணிகம் முக்கிய காரணமாக உள்ளது என்று கூறியுள்ளது.

Australia's GDP grew 3.3 percent year-on-year, according to a report by the Australian Bureau of Statistics on National Accountingகடந்தாண்டில் மட்டும் ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 3.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தரவுகளை ஆய்வு செய்யும் குழு தகவல் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் முதலாளிகள் 21.6 சதவீதம் வரை லாபம் பெற்றுள்ளனர். ஆனால் இதன்மூலம் தொழிலாளர்வெறும் 5.5 சதவீதம் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராய்ட்ரஸ் நிறுவனம், ஆஸ்திரேலியாவிலுள்ள பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்த தகவலை வெளியிட்டது. அதில், அந்நாட்டின் கடந்தாண்டு பொருளாதார வளர்ச்சி 0.5 சதவீதமாகவும் உள்நாட்டு உற்பத்தி மூலம் கிடைக்கும் வளர்ச்சி 2.9 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

தற்போது அவர்களே ஆச்சரியமடையும் அளவுக்கு இந்த வளர்ச்சி அமைந்துள்ளது. கொரோனா மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக ஆஸ்திரேலியர்கள் தங்களுடைய செலவை பெருவாரியாக குறைத்துக் கொண்டனர். அதனால் மக்கள் வழியில் கிடைக்கும் லாப எண்ணிக்கை சற்று சரிந்துள்ளது.

எனினும் அதனால் பெரியளவில் பாதிப்பில்லை என்று ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வரக்கூடிய காலங்களில் இந்த நிலை மாறும் என்றும் கருதப்படுகிறது.