Breaking News

ஐரோப்பாவின் ஆற்றல் மாதிரிக்கு ஆஸ்திரேலியா மாறினால், பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என வல்லுநர்கள் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Many experts have warned that if Australia shifts to Europe's energy model, economic growth will slow.

சமீபத்தில் மக்களிடையே உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் ஜிம் சால்மர்ஸ், ஆஸ்திரேலியாவின் மின்சார உற்பத்தி கடும் சரிவை கண்டு வருகிறது. இதனால் மாற்று எரிசக்திக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு காரணம் முந்தைய அரசாங்கம் தான் என்று குற்றஞ்சாட்டிய அவர், விலைவாசி உயர்வு, எரிபொருள் உயர்வு மற்றும் மின்சார கட்டணம் உயர்வு உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொள்ள புதிய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதியில் செயல்பட்டு வந்த நியூசாலந்தின் மின்சார உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமான ரீவேம்ப்டு, தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டுள்ளது. தன்னிடமுள்ள வாடிக்கையாளர்களை மற்ற பகுதிக்கு செல்லும்படி தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய ரீவேம்படின் முடிவு, சிறு மற்றும் குறு மின்சார உற்பத்தி நிறுவனங்களை நிலைகுலையச் செய்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.