Breaking News

ஆஸ்திரேலியாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்த விவகாரம் : நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டதாக பிரான்ஸ் தூதர் குற்றச்சாட்டு

Australia's ambassador accuses Australia of betrayal over new submarine deal

பிரான்சிடம் 90 பில்லியன் டாலர் மதிப்பில் அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை வாங்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா கைவிட்டு, அதை அமெரிக்காவிடம் வாங்க இருப்பதாக தெரிவித்தது. இது தொடர்பாக தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பிரான்ஸ் தூதர் Jean-Pierre Thebault ஆஸ்திரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டதாகவும், தங்கள் முதுகில் குத்தி விட்டதாகவும் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக ABC நேர்காணலில் விரிவான விளக்கத்தை அளித்துள்ள பிரான்ஸ் தூதர், நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் தொடர்பாக கடந்த சில பேச்சுவார்த்தைகளில் கூட எந்தவிதமான பிரச்சனையும் ஆஸ்திரேலியாவுடன் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார் மேலும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இதனை ரத்து செய்ததன் மூலமாக ஆஸ்திரேலியா மிகப்பெரும் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆக்கஸ் திட்டத்தின் மூலமாக பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உடன் கைகோர்த்துள்ள ஆஸ்திரேலியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் அணு ஆற்றலில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை அவர்களிடமிருந்து வாங்க உள்ளதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்தார்.

Australia's ambassador accuses Australia of betrayal over new submarine deal.2016 ஆம் ஆண்டு முதலே பிரான்ஸ் நாட்டின் நேவல் குழுவிடமிருந்து நீர்மூழ்கி கப்பலை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆஸ்திரேலியா நடத்தி வரும் நிலையில் , இந்த அறிவிப்பு பிரான்சுக்கு பேரிடியாக அமைந்தது. இதனால் தாங்கள் கடுமையாக ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், இது தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் பிரான்ஸ் தூதர் Jean-Pierre Thebault கூறியுள்ளார். ஒவ்வொரு முறை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் பிரான்ஸ் அதிபர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், அப்போது ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக அவர் எந்தவித நம்பிக்கையும் அளிக்கவில்லை என்றும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Yves Le Drian வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுவரைக்கும் நீர்மூழ்கி கப்பல் திட்டப் பணிகள் தொடர்பாக எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இரு நாடுகளுக்கும் இல்லை என்றும், மிகுந்த வெளிப்படைத்தன்மை உடனேயே இந்த விவகாரத்தில் பிரான்ஸ் நடந்துகொண்டதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையை இழக்கச் செய்து விட்ட ஆஸ்திரேலியா விளக்கம் என்கிற ஒன்றை நிச்சயம் தர வேண்டும் என்றும், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது தொடர்பான உரிய விளக்கத்தை அவர்கள் தருவார்கள் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

Link Source: shorturl.at/hyHS1