Breaking News

பல்வேறு நாடுகளில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்பும் விவகாரம் : அடுத்த மாதம் முதல் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதற்கான திட்டம் அறிவிப்பு

கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக பல்வேறு உலக நாடுகளுடனான விமான சேவை நிறுத்தப் பட்டிருந்த நிலையில் ஆஸ்திரேலியர்கள் சிக்கித் தவித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் படிப்படியாக சொந்த நாட்டுக்கு திரும்பி வருகின்றனர் விமான நிலையத்திற்கு அருகில் இருக்கக்கூடிய விடுதிகளில் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு வருகின்றன இந்நிலையில் பல ஆயிரம் டாலர்கள் கூடுதல் செலவாகும் நிலையில், அவர்களை விடுதிகளில் இல்லாமல் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதற்கான புதிய திட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அடுத்த மாதம் முதல் செயல்படுத்த உள்ளதாக கூறியுள்ளது.

செப்டம்பர் இறுதியில் இதற்கான திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும், பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக ஆஸ்திரேலியா திரும்பும் சொந்த நாட்டினரை அவரவர்கள் வீடுகளிலேயே தனி அறைகளில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Return of Australians stranded in various countries. Homeschooling plan announced next month.ஆஸ்திரேலியாவின் Therapeutic Goods Administration TGA அனுமதி வழங்கியுள்ள 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் விமான பணியாளர்கள் உட்பட அனைவரும் 14 நாள் விடுதி தனிமைப்படுத்தலுக்கு பின்னர் ஏழு நாட்கள் அவர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் ஆப் மூலமாக அவர்கள் இருக்கும் இடங்களை கண்டறிந்து, முக குறியீடுகள் மூலமாகவும் அவர்களின் விவரங்கள் கண்காணிக்கப்படும் என்றும் அதன் அடிப்படையில் அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விடுதிகளில் இல்லாமல் ஹோட்டல்களில் தனிமைப் படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது தொடர்பான ஒத்திகைகளை நியூ சவுத் வேல்ஸ் தற்போது தொடங்கியுள்ளது.

இந்தியாவில் சிக்கித்தவித்த Kanchan Saxena, தனது குழந்தைகளை பார்ப்பதற்காக ஆஸ்திரேலியா வர திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் திட்டம் மூலமாக கிட்டத்தட்ட குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே தனது குழந்தைகளை பார்க்க இருப்பதாக கூறியுள்ளார்.

பெருந்தொற்று காலத்தில் விமான கட்டணங்கள் அதிகளவு இருக்கும் நிலையில் அதற்கும் செலவழித்து ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கும், செலவழிப்பது மிகப் பெரும் சுமை என்றும் தற்போது அது தவிர்க்கப்பட்டு உள்ளதாகவும்
Kanchan Saxena கூறியுள்ளார்.

Return of Australians stranded in various countries. Homeschooling plan announced next month,பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள் ஒரே விடுதியில் தனிமைப்படுத்த படுவதே ஆபத்தானது என்றும், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் பாதுகாப்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதலில் குறைவான பாதிப்பு இருக்கும் நாடுகளில் இருந்து பயணிகள் ஆஸ்திரேலியா திரும்ப உள்ளதாகவும், அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிய பின்னர் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்த படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: shorturl.at/qsAIK