Breaking News

காபுலில் பெண்கள் பணிக்கு வர தாலிபன்கள் தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு வழங்கப்படக் கூடிய உரிமைகள் மறுக்கப்பட லாம் என்ற அச்சம் இருந்து வந்தது. தாலிபான்களின் ஆட்சி அமைந்து 30 நாட்கள் ஆகிறது ,இந்நிலையில் பெண்களுக்கான பல்வேறு உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவது பெண்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் 1990களில் நடைபெற்ற தாலிபன் ஆட்சி நடைமுறைக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அன்மையில் தொடக்க,நடுநிலை கல்வி பயிலக் கூடிய பெண்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்று தாலிபன்கள் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

The Taliban have banned women from coming to work in Kabul.பல்கலைக்கழகங்களில் படிக்கக் கூடிய பெண்கள், பெண்கள் கல்லூரிகளில் மட்டுமே படிக்க வேண்டும் என்றும் இருபாலர் கல்லூரிகளில் படிப்பதற்கு அனுமதி கிடையாது என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். மேலும் ஆண்களால் செய்யமுடியாத பணிகளில் மட்டுமே பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ஏராளமான பெண்கள் வேலை இழக்கக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூலில் உள்ள பெண்கள் விவகாரத்துறை அமைச்சகத்தின் முன்பாக சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் பெண்களின் பங்களிப்பு இல்லாத சமுதாயம் ஒரு இறந்த சமுதாயம் என்று அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் பெண்கள் விவாதத்திற்கான அமைச்சகத்தை அண்மையில் மதப் பிரச்சார அமைச்சகம் என்று தாலிபன்கள் மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் தாலிபன்கள் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 3 தாலிபன்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர் . அன்மையில் காபூலுக்கான மேயராக பொறுப்பேற்றுள்ள Hamdullah Namony,செய்தியாளரிடம் பேசிய போது பெண்களின் பாதுகாப்பு கருதியே அவர்களை பள்ளிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார் .

The Taliban have banned women from coming to work in Kabulஅதேநேரத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடுமையான வேலை வாய்ப்பு இல்லாமை காரணமாகவும் பஞ்சத்தின் காரணமாக ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை விற்பதற்கு சாலைகளில் குவிந்த்திருக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்த நாட்டிலிருந்து வெளியேறி விட அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். தாலிபன்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தலும், பஞ்சத்தையும் வறுமையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சர்வதேச நிதி உதவியின் மூலம் ஆப்கானிஸ்தானில் அரசாங்கம் இயங்கி வந்த நிலையில் தற்போது சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்பு இல்லாததன் காரணமாக தாலிபன்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காபூல் வாசி ஒருவர் யாரும் விருப்பப்பட்ட தங்களுடைய பொருட்களை விற்பதற்கு முன் வரவில்லை என்றும், அடுத்த வேலை உணவுக்காக இந்த நிலை மாறி இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இன்று இருக்கக்கூடிய பொருட்களை விற்று உணவருந்த கூடிய நிலையில் தாங்கள் தள்ளப்பட்டு இருந்தாலும் எதிர்காலத்தில் நிச்சயம் பிச்சை எடுக்க வேண்டி நிலை ஏற்படலாம் என்றும் அவர் வேதனை தெரிவிக்கிறார்.

Link Source: shorturl.at/cinEJ