Breaking News

ஆஸ்திரேலியாவில் சர்வதேச விமான போக்குவரத்து அடுத்தாண்டு மே மாதம் வரை தொடங்காது என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் 2021 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் இந்தாண்டு இறுதிக்குள் ஆஸ்திரேலியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால் எவ்வளவு பேருக்கு செலுத்தப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்பட்டாலும், சர்வதேச எல்லைஎல்லைகளை திறப்பதற்கு இப்போது வாய்ப்பில்லை என்றும், தனிமை முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வருபவர்களை அனுமதிப்பது குறித்தும், பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

According to the budget, international flights to Australia will not start until May next yearநியூஸிலாந்து போன்ற கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அனுமதிப்பது குறித்தும் பரிசீலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா தொடர்பான வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி இந்தாண்டு சாத்தியமில்லை என்றும், அடுத்தாண்டு மே மாதத்திற்கு பிறகே பரிசீலிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பொருளாளர் ஜோஷ் பிரைடன்பெர்க், வருங்காலம் குறித்து யூகத்தின் அடிப்படையில் கருத்து தெரிவிக்க முடியாவிட்டாலும், வருங்காலத்திற்கான முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

scott morrisonசர்வதேச எல்லைகளை திறப்பது குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த பிரதமர் ஸ்காட் மோரிசன், அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு தான் அது குறித்து சிந்திக்க முடியும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்தாண்டு இறுதியில் வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பது குறித்து சூழ்நிலையின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுற்றுலா துறை மிக மோசமான நிலைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக இத்துறை சார்ந்தவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த பட்ஜெட்டில் தடுப்பூசிக்காக மட்டும் 1.9பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://cutt.ly/5bD5VV3