Breaking News

ஆஸ்திரேலிய பட்ஜெட் 2021 : ராஜ்ஜிய ரீதியான பலம் பெற்று வர்த்தகத்தை பெருக்கும் என மத்திய அரசு நம்பிக்கை

கொரோனா பெருத்தொற்றால் வர்த்தக பாதிப்பை சந்தித்த பின்னர் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு்ள்ளது. ராஜதந்திர ரீதியில் வர்த்தகத்தை மேம்படுத்தவும், சீனாவுடனான வர்த்தக உறவை எதிர்கொள்ளவும் பல்வேறு திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் வகுக்கப்பட்டு்ள்ளது.

வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், அரசு ஊழியர்களுக்கு போதுமான பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என்றும் இந்த ஆண்டு அவர்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி உள்ளது .

வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரவும், அதன் மூலம் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தவும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு 198 மில்லியன் டாலர்களை ஒதுக்கி உள்ளது.

budgetஅதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் தொழில்துறையை மேம்படுத்தவும், வர்த்தகத்தில் முதலீடுகளை அதிகரிக்கவும் பல்வேறு புதிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது. ஏற்கனவே பல்வேறு ஏற்றுமதி வர்த்தகத்தை சீனா கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் வர்த்தக தண்டனை அடிப்படையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையிலும் கடந்த சில தொய்வடைந்த பணிகளை துரிதப்படுத்தவும் அரசு நிதிநிலை அறிக்கையில் திட்டமிட்டுள்ளது.

ஆஸ்தரேலியாவில் மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய வர்த்தகத்தை மேம்படுத்த அரசு அத்தனை உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் Marise Payne, வர்த்தகத்துறை அமைச்சர் Dan Tehan ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

Marise Payneமிகக் கடினமான வர்த்தக சூழலில் ஆஸ்திரேலிய வர்த்தக நிபுணர்களுடன் இணைந்து ஏற்றுமதியாளர்களுக்கு உள்ள பரந்துபட்ட வாய்ப்புகளை உறுதி செய்யும் பணிகளையும் விரைந்து மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர். சர்வேதச வர்த்தகத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் உலக வர்த்தக மையத்துடனான சிக்கல்களை சரி செய்ய அதிகாரிகளுக்கு மத்திய அரசு பக்கபலமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் ராணுவத்துறைக்கான முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலும், மாகாண அரசுகளுக்கு உரிய இடமளிக்கும் வகையிலும் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று வர்த்தக, வெளியுறவுத்துறை அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்கான உதவித் தொகை விவகாரத்திலும் நிதிக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் என்ற அளவில் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் இது தற்காலிக முடிவு மட்டுமே என்றும் அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Link Source: https://cutt.ly/AbFerqR