தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி உள்ள நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாதது மிகப் பெரும் சிக்கலாக மாறி உள்ளது. இந்நிலையில் நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்காத தொழிலாளர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 140 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டு வந்த சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சிகிச்சை மையத்தில் இதில் 70 படுக்கைகள் சித்த மருத்துவ சிகிச்சைக்கும், 70 படுக்கைகள் அலோபதி மருத்துவத்திலும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ மையங்கள் சென்னையில் மட்டும் கூடுதலாக 14 இடங்களில் விரிவுபடுத்தப்படும் என்றும், தமிழகத்தின் 12 மாவட்டங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் கூறியுள்ளார்.
இதனிடையே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க தமிழகத்தில் 142 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். ஒவ்வொரு மையமும் தலா 16 லட்சம் ரூபாய் செலவில் அமைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் படுக்கை வசதிகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படுவதை தடுக்க கொரோனா வார் ரூம் எனும் கட்டளை மையம் உருவாக்கப்பட்டு அதன் மூலமாக தட்டுப்பாடின்றி அனைத்து உதவிகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 29 ஆயிரத்து 272 பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 7 ஆயிரத்து 430 பேருக்கு தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் தொன்றுதொட்டு பாதித்தவரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 38 ஆயிரத்து 509 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 298 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 810 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் நோய் பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 182 ஆக உள்ளது.
இதனிடையே இந்தியாவை பொறுத்தவரை தலைநகரான டெல்லியில் கடும் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மகாராஷ்டிரா மிக அதிக பாதிப்புகளோடு முதலிடத்திலும் அதனை அடுத்து கர்நாடக மாநிலத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கேரளா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்கள் உள்ளன. ஐந்தாவது இடத்தில் உள்ள தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 38 ஆயிரத்து 509ஆக உள்ளது. தற்போது 1 லட்சத்து 62 ஆயிரத்து 181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Link Source: https://cutt.ly/obD4Z1a