Breaking News

Holiday Inn தொற்றால் ஏற்பட்ட பாதிப்பை தடுப்பதற்காக 5 நாள் ஊரடங்கு !

5 day lockdown in Victoria to prevent corona

Holiday Inn ஹோட்டலில் ஏற்பட்ட தொற்று 13ஆக உயர்ந்ததால், அரசு அடுத்து என்ன செய்ய போகிறது என்பதை முன்னதாகவே விக்டோரியா போலீசுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் முக்கிய தலைவர்களும் ஒரே நேரத்தில் சந்தித்தனர்.

Queensland மாநிலத் தலைவர் Annastacia Palaszczuk விக்டோரியா அலுவலர்கள் மற்றும் உள்மாநிலங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொண்டார். மேலும் இந்த ஊரடங்கு , Melbourneக்கு மட்டும் பொருந்துமா என்ற கேள்வி உள்ளது என்றார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் 5 தொற்றுகள் உறுதியானதையடுத்து இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக. சுகாதார துறை தெரிவித்தது. இது தொடர்பாக சுகாதாரத்துறை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில் , முன்னர் அறிவிக்கப்பட்ட தொற்றுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இரண்டு நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஐந்து தொற்றுகள் நேற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, Holiday Inn-னில் ஏற்பட்ட தொற்று 13 ஆக உயர்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் வேலை செய்யும் அதிகாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த ஹோட்டலில் உள்ள female assistant manager மற்றும் இரண்டு ஆண்கள், இவர்களுடைய துணைவி ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு நபர் மெல்பர்னில் இருக்கும் Camberwell Grammar பள்ளியை சேர்ந்தவர்.

இந்த பாதிப்பில் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவரும் உள்ளனர். இவர் அனைவருக்கும் தொற்று உறுதியானது. அதில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வாரத்தில் தொற்று மிக விரைவாக பரவுவதால் மெல்பர்னில் மீண்டும் ஊரடங்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்டோரியா அரசாங்கம் இது எவ்வாறு நடக்கிறது என்ற ஆலோசனையில் இருந்தனர். எல்லாவிதமான வழிகளை ஆராய்ந்தனர். இது தொடர்பாக ஆலோசிக்க மெல்பர்னில் உள்ள MPக்கள் Canberraவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Usher of the Black Rod செனட்டருக்கு எழுதியது. Holiday Inn COVID-19 தொற்று உருவாகி வருவதால் Melbourne பகுதியில் உள்ள senator-கள் Canberra செல்ல பரிந்துரைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது எந்த எல்லை தடுப்பும் விக்டோரியாவிற்கு இல்லை. இது எந்த நேரத்திலும் மாறலாம். முதன்மை சுகாதார அலுவலர்கள் இதைப்பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம் என்று கூறினர்.

மாநில முதல்வர் Daniel Andrews இதற்கு விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் Scott Morrison வெள்ளிக்கிழமை வந்த போது எந்த விளக்கமும் தரப்படவில்லை. இது குறித்து Scott Morrison கூறுகையில், மாநில தலைவர் எதை செய்யலாம், செய்யக்கூடாது என்று நான் கூற மாட்டேன். ஆனால் அவர் எதை அறிவிக்க வேண்டுமோ, அந்த முடிவுகளை அறிவிக்க கூறுவேன் என்றார்.

இந்த நெருக்கடி வர காரணம் விமான நிலையத்தில் உள்ள Brunetti cafeல் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியானதால் ஏற்பட்டது. மேலும் அங்கு சென்றவர்கள் 14 நாள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், சோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

விக்டோரியாவில் பல பகுதிகள் தொற்று ஏற்படும் பகுதியாக இருந்தாலும் எந்த சமூக பரவலும் இல்லை. வியாழக்கிழமை விக்டோரியா சோதனை commander Jeroen Weimar கூறும்பொழுது,அதிகாரிகள் சரியான பாதையில் செல்கிறார்கள்.இது அவர்களுக்கு மிகவும் சிக்கலாக உள்ளது. மரபணு சோதனை மூலம் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.