Breaking News

பெரும் கட்டுப்பாடுகளை சந்திக்கும் நிலையில் விக்டோரியா..ஊரடங்கு நீடிக்கப்படுமா ?

Will the lockdown be extended to Victoria

விக்டோரியா தனது 4வது ஊரடங்கை சந்திக்கும் நிலையில் உள்ளது. மெல்பர்ன் விமானநிலையத்தில் உள்ள Holiday inன் ஹோட்டலில் ஏற்பட்ட தொற்று 13 ஆக உயர்ந்ததால், அங்கு ஊரடங்கு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

விக்டோரியா மாநில முதல்வர் Daniel Andrews கூறுகையில், வெள்ளிக்கிழமை மதியம் முதல் UK யின் மாறுபட்ட வைரஸ் தொற்று மிகவும் அதிகமாக உள்ளது. கடந்த 12 மாதங்களில் நமது நாட்டில் வேறு எங்கும் பார்க்காத அளவு மிக அதிகமாக பரவுகிறது. இதனால் இந்த ஊரடங்கு ஐந்து நாட்களுக்கு தொடரும்.

உணவு, வேலை, உடற்பயிற்சி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்ல வேண்டும். மக்கள் தன் வீட்டிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இடங்களுக்கு மட்டும் செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு 2 மணிநேரம் உடற்பயிற்சி செய்ய மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், பொழுதுபோக்கு இடம், நூலகம் ஆகியவை மூடப்பட வேண்டும். பொதுக்கூட்டங்கள் மற்றும் வீட்டிற்கு வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும்பொழுது கண்டிப்பாக முகமூடி அணிய வேண்டும். தற்போது கொரோனா தொற்று 13 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. இந்த நிலை நமக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்றார்.

Health department தனது ட்விட்டரில் Melbourne விமானநிலையத்தில் 4வது டெர்மினல் தொற்று ஏற்படும் இடமாக உள்ளது என்று கூறியது. பிப்ரவரி 9ஆம் தேதி அன்று அங்கு சென்றவர்கள் தன்னை சோதனை செய்து கொள்ளவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் 30 பகுதிகளை தொற்று ஏற்படும் பகுதிகளாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.